‘எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே’ என்பதுபோல, ‘எல்லா மோசடிகளும் கொங்கு மண்டலத்தில் இருந்தே’ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த மக்களின் வாழ்வில் கும்மியடிக்காத மோசடிகளே இல்லை. மண்ணுளிப் பாம்பு தொடங்கி, நாகரத்தினக்கல், ரைஸ் புல்லிங், ஈமுக்கோழி, நாட்டுக்கோழி, நிலமோசடி என டிசைன் டிசைனாகக் கடை விரித்தாலும், பணத்தை இழந்து கண்ணீர் சிந்துவதே பலருக்கும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது!

அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருக்கிறது நகை முதலீட்டு மோசடி. ‘ஸ்கிராப் கோல்டு எனப்படும் பழைய தங்க நகையை எடுத்துத் தொழில் செய்துவருகிறோம். பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்’ என டி.வி., பத்திரிகைகளில் கலர்கலராக விளம்பரம் கொடுத்தது, கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘முல்லை ஜூவல்லர்ஸ்’. கோயம்புத்தூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் எனப் பல இடங்களில் கிளையைத் திறந்து, சுமார் ரூ.500 கோடி வரை சுருட்டியிருக்கிறது இந்த முல்லை ஜுவல்லர்ஸ். மக்கள் முதலீடு செய்த பணத்திலிருந்தே இரண்டு மாதங்களுக்குப் பணம் கொடுத்து நம்ப வைத்திருக்கிறார்கள். நகை, வீடு எல்லாவற்றையும் அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் முதலீடு செய்தவர்கள், ‘எப்படியாவது எங்கள் பணத்தை மீட்டுத்தாருங்கள்’ எனக் கண்ணீரோடு ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி-யிடம் புகார் அளித்துவிட்டுப் பரிதாபமாகக் காத்துக்கிடக்கிறார்கள்.

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் என்று அ.தி.மு.க பிரபலங்கள்தான் சிரித்த முகத்துடன் ரிப்பன் வெட்டிக் கடைகளைத் திறந்துவைத்துள்ளனர். அமைச்சர்களே திறந்து வைத்த நிறுவனம் என்பதால், கூடுதல் நம்பிக்கையுடன் மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

“டி.வி-யில வந்த விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்துட்டேன். மோசடி நிறுவனம்னு பலரும் சொன்னப்ப, அதோட எம்.டி குறிஞ்சிநாதன்கிட்ட பேசினேன். ‘27 வயசு பையனான என் வளர்ச்சியைப் பார்த்து பலரும் பொறாமையில அப்படி சொல்றாங்க, நம்பாதீங்க’னு டச்சிங்கா பேசினார். அதிகளவு பணத்தை முதலீடு செஞ்சவங்களை பஸ்ல கூட்டிட்டுப் போய் தடபுடலா விருந்து வச்சிருக்காங்க. இதையெல்லாம் பார்த்து அவங்க மேல சந்தேகமே வரலை. ஒருகட்டத்துல எல்லாரும் பணத்தைக் கேட்டுப் போய் நிக்கவே, தலைமறைவாகிட்டாங்க. போலீஸ்கிட்டப் புகார் கொடுத்தா, எஃப்.ஐ.ஆர்கூடப் போடமாட்டேங்குறாங்க” என்று குமுறுகிறார் ஆமினா பேகம்.

ஏமாந்தவர்களில் மற்றொருவரான ராம்குமார், “அரிசி வியாபாரம், கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணைனு 25 தொழில்கள் பண்றதா குறிஞ்சிநாதன் சொன்னார். நீங்க கொடுக்குற பணத்துல நாங்க தங்கத்தை வாங்கி, அதுல கிடைக்கிற லாபத்தை மூணு மாசம் கழிச்சு உங்களுக்குக் கொடுப்போம்னு சொன்னாங்க. மூணு மாசத்துக்கு அப்புறமா கேட்டப்ப, ‘தீபாவளி, பொங்கல் சமயத்துல பணத்தை எடுக்காம இருந்தா, இன்னும் நல்ல லாபம் கிடைக்கும்’னு சொல்லி நம்ப வெச்சாங்க. கடைசியில காணாமப்போயிட்டாங்க. இந்தக் காலத்துலயும் இப்படி ஏமாறலாமானு போலீஸ் அதிகாரிங்க கேக்குறாங்க. சரியான ஆளோட நகைக்கடையைத்தான் திறந்து வைக்குறோமான்னு தெரியாமலே, திறப்பு விழாவுல அமைச்சருங்க கலந்துக்கிட்டாங்க. அதையெல்லாம் நம்பித்தானே நாங்க மோசம் போயிட்டோம்” என்று கதறுகிறார்.

அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என்று பலரும்கூட ஏமாந்துள்ளனர். ஆனால், வெளியே சொல்ல முடியாமல் தவித்துக்கிடக்கின்றனர். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவரின் அம்மா, அ.தி.மு.க-விலும் பொறுப்பில் இருக்கிறார். இவர் முதலீடு செய்த சுமார் 10 லட்சத்தை ஈரோடு அ.தி.மு.க நிர்வாகிகள் மூலமாக அந்தப் பணத்தைப் பெற ஆறு மாதங்களுக்கு முன்பே முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், அது முடியாமல் போயிருக்கிறது.

அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசுவதற்காகத் தொடர்புகொண்டபோது, ‘அமைச்சர் ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறார்’ என்று ஒரு வரியில் முடித்துக்கொண்டார், அவரின் உதவியாளர்.

மற்றோர் அமைச்சரான கருப்பணனைத் தொடர்புகொண்டபோது, “செங்கோட்டையன் கூப்பிட்டாருனு அவர்கூட போயிட்டுவந்தேன். மத்தபடி அதைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது. இந்தமாதிரி நிறையப் பேர் ஏமாத்துறாங்க. பொதுமக்கள்தான் ஜாக்கிரதையா இருந்திருக்கணும். நான் யாரையும் அந்த நகைக்கடையில பணம் போடச் சொல்லிச் சொல்லலையே” என்று வக்கனையாகச் சொன்னார்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி-யான சக்தி கணேசனிடம் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டபோது, “விசாரணை நடைபெற்று வருகிறது” என்று மட்டும் சொன்னார். பணத்தை இழந்த ஒருவர், சென்னை வரை சென்று அதிகாரிகளைச் சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, அவருக்கு மட்டும் ஈரோடு போலீஸாரே அந்தப் பணத்தை பைசல் செய்து அனுப்பியிருக்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர் மீது இதுவரையில் வழக்குப்பதிவு செய்யவில்லை.

1991-96 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இப்படித்தான் வரிசையாக ஃபைனான்ஸ் நிறுவனங்கள் ஓட்டம்பிடித்தன. அப்போதும், இதேபோல அமைச்சர்களின் தலைகள் அதில் உருண்டன. அந்தக் காலம் மீண்டும் கண்ணில் தெரிகிறது!

- நவீன் இளங்கோவன்,
படங்கள்: ரமேஷ் கந்தசாமி