Published:Updated:

தங்கை - மைத்துனர் வெட்டிக்கொலை - சொத்துக்காக அண்ணன் வெறிச்செயல்!

தங்கை - மைத்துனர் வெட்டிக்கொலை -  சொத்துக்காக அண்ணன் வெறிச்செயல்!
தங்கை - மைத்துனர் வெட்டிக்கொலை - சொத்துக்காக அண்ணன் வெறிச்செயல்!

சொத்து பங்கு பிரிப்பதில் உள்ள பிரச்னை காரணமாக சொந்த தங்கை மற்றும் தங்கையின் கணவரை வெட்டி கொலைச் செய்த அண்ணனை காவல்துறையினர் தேடி வருகினர்.

தங்கை - மைத்துனர் வெட்டிக்கொலை -  சொத்துக்காக அண்ணன் வெறிச்செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்து என்ற மணிகண்டன் (50). இவர் தோவாளை மலர் சந்தையில் மொத்த பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கல்யாணி (38), மகள் ராமலட்சுமி(15). ராமலெட்சுமி 10 ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பூ வியாபாரி முத்து வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல் முத்து, அவரது மனைவி கல்யாணி மற்றும் மகள் ராமலட்சுமி ஆகியோரை கண்மூடிதனமாக வெட்டினார்கள். இதில் தலை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் வெட்டுகாயம் ஏற்பட்டதால் கல்யாணி வீட்டிலேயே பரிதாபமாக பலியானார்.

தங்கை - மைத்துனர் வெட்டிக்கொலை -  சொத்துக்காக அண்ணன் வெறிச்செயல்!

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் முத்து உயிரிழந்தார். அவரது மகள் ராமலட்சுமி படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமலட்சுமி தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகிறார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் தோவாளை மலர் சந்தை அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரனை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, சொத்து பங்குவைப்பது சம்பந்தமாக கல்யாணிக்கும் அவரது உடன்பிறந்த அண்ணன் சுடலையாண்டிக்கும் பிரச்னை இருந்துவந்துள்ளது.

தங்கை - மைத்துனர் வெட்டிக்கொலை -  சொத்துக்காக அண்ணன் வெறிச்செயல்!

இதில் கல்யாணி சமாதானமாக. சென்றுள்ளார். ஆனால் சுடலையாண்டியின் சேர்க்கை சரியில்லாததால் கூலிப்படை உதவியுடன் இந்த கொலையை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் சுடலையாண்டி தலைமறைவாக இருப்பதாகவும், சந்தேகத்தின்பேரில் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்திவருவதாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.