Published:Updated:

சிறுமியை வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மார்ச் 2-ம் தேதி தூக்கு! - உறுதிப்படுத்தியது ஹைகோர்ட்

சிறுமியை வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மார்ச் 2-ம் தேதி தூக்கு! - உறுதிப்படுத்தியது ஹைகோர்ட்
சிறுமியை வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மார்ச் 2-ம் தேதி தூக்கு! - உறுதிப்படுத்தியது ஹைகோர்ட்

நான்கு வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்த மத்தியப்பிரதேச ஆசிரியர் மகேந்திர சிங் கோன்டுக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றம். குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை என்ற புதிய சட்டம், மகேந்திர சிங்குக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்போவதன் மூலம் முதன்முறையாக அமல்படுத்தப்படுகிறது.  

சென்ற வருடம், ஜூன் மாதம் 4 சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மகேந்திர சிங் கோன்டு, சிறுமி இறந்துவிட்டாள் என்று அந்தக் குழந்தையின் உடலைக் காட்டுக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால், மகளைக் காணவில்லை என்று தேடிய பெற்றோர், அந்தச் சின்னஞ்சிறு பிள்ளையைக் காட்டுக்குள் இருந்து கண்டெடுத்து மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். காவல்துறையும் குற்றவாளியை அடுத்த சில மணி நேரத்திலேயே கைது செய்துவிட்டது. உயிருக்குப் போராடியபடி இருந்த அந்தச் சின்னஞ்சிறு உயிரைக் காப்பாற்ற, மத்தியப்பிரதேச அரசு, சிறுமியைத் தனி விமானத்தில் டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. சரிந்துபோன குடல்களை சரி செய்து, உடலில் பல தையல்கள், ஆபரேஷன்கள் என்று மறு ஜென்மம் எடுத்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை மழலை மாறாத குரலில் வாக்குமூலம் கொடுக்க, நாடே கலங்கிப்போனது. மகேந்திர சிங்குக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட, இதை மத்தியப் பிரதேசத்தின் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. 

இதோ, அரும்புகளை அழிக்கும் ஒரு கொடும் கரத்தை, வரும் மார்ச் 2-ம் தேதி காலை 5 மணிக்குத் தூக்கிலிடப் போகிறது சட்டம். குழந்தைகளைப் பாதுகாப்பதன் நல்ல ஆரம்பமாக இருக்கட்டும் அந்த நாள்!