கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த புகாரில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப்பின் முருகனும், கருப்பசாமியும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுச் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

ஆனால், நிர்மலாதேவிக்குத் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுகிறது. நீதிமன்றத்துக்கு அவரை அழைத்துவரும்போது, பத்திரிகையாளர்களிடம் பேசவிடாமல், காவல்துறையினர் தடுப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தி, ‘நிர்மலாதேவியின் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றவேண்டும்’ என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை கடந்த 27-ம் தேதி விசாரித்த நீதிபதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

சுகந்தியிடம் பேசினோம். ‘‘முதலில் இந்த விவகாரத்தை வெளியே வரவிடாமல் அமுக்க நினைத்தனர். மாதர் சங்கமும், மாணவர் சங்கமும் அருப்புக்கோட்டையில் போராட்டம் நடத்திய பிறகுதான், நிர்மலாதேவியைக் கைது செய்தார்கள். பின்புதான், இதில் நிர்மலாதேவியின் பின்னணியில் பெரும்புள்ளிகள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் குற்றவாளிகள் என்று விசாரணையை முடித்துக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய பல்கலைக்கழக நிர்வாகிகள் பலரும் தப்பிவிட்டனர். நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பது விசாரிக்கப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி தரப்பில் முறையாக விசாரிக்காமல் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதையெல்லாம் குறிப்பிட்டுத்தான், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும். அதுவரை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டுமென்று கோரினோம். அந்த வழக்கில், தற்போது நல்ல உத்தரவு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர், “நிர்மலாதேவி வழக்கில், சி.பி.சி.ஐ.டி விசாரணை திருப்தியாக இல்லை. கொலைக் குற்றவாளிகளுக்குக்கூட ஜாமீன் கொடுக்கும்போது, நிர்மலாதேவிக்கு ஏன் ஜாமீன் வழங்கவில்லை? தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன சூப்பர் குற்றவாளியா? அவரது ஜாமீனுக்கு சி.பி.சி.ஐ.டி எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? அவரது ஆடியோவில் குறிப்பிட்டுள்ள உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படாதது ஏன்? கவர்னர் நியமித்த சந்தானம் கமிஷன் அறிக்கை என்ன ஆனது?” என்று அரசு தரப்புக்கு பல கேள்விகளை எழுப்பினர்.

மார்ச் 15-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்று, இன்னொரு ‘பிரேக்கிங் நியூஸ்’ கிடைக்கலாம்.

- செ.சல்மான், படம்: ஈ.ஜெ.நந்தகுமார்