பொள்ளாச்சியில் நான்கு இளைஞர்கள், ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதை வீடியோ எடுத்தும் வெளியிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் இப்படி ஒன்று, இரண்டல்ல... நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை அந்தக் கும்பல் சீரழித்து, வீடியோ பதிவு செய்திருக்கும் அதிரவைக்கும் உண்மை வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகார் மூலம் இவர்களின் அட்டூழியங்கள் வெளியே வர... ஒட்டுமொத்த பொள்ளாச்சியும் அதிர்ந்துகிடக்கிறது.

இந்தக் கும்பலின் லீலைகளை அம்பலப்படுத்திய, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் பேசினோம். ‘‘அந்தப் பொண்ணு பேர் உமா. (பெயர் மாற்றப் பட்டுள்ளது) பொள்ளாச்சியில் ஒரு கல்லூரியில் செகண்டு இயர் படிக்குது. ஓரளவுக்கு வசதியான பொண்ணு. திடீர்னு ஒருநாள் தற்கொலை பண்ணிக்கப்போயிருச்சு. நல்லவேளை வீட்ல பார்த்துக் காப்பாத்திட்டாங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சப்பதான், உமா தனக்கு நேர்ந்ததை சொல்லுச்சு. பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த சபரிராஜன் ஃபேஸ்புக் மூலமா உமாகிட்ட பழகியிருக்கான். காதலிக்கிறதா அவன் சொன்ன வார்த்தைகளை நம்பி, உமா ‘அவுட்டிங்’ போயிருக்கு.

திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோரும் அவர்களுடன் போயிருக்காங்க. ஆளரவமில்லாத பகுதியில் கார் போய்கிட்டிருந்தப்ப, சபரிராஜன் வலுக்கட்டாயமாக உமாவைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கான். எவ்வளவோ முயற்சி செஞ்சும் உமாவால் அதைத் தடுக்க முடியலை. நாலு பேருல ஒருத்தன் இதை செல்போன்ல வீடியோ எடுத்திருக்கான். ‘தயவு செய்து அந்த வீடியோவை டெலிட் பண்ணிடுங்க’ன்னு உமா கதறியிருக்கா. அப்போ அவனுங்க, ‘வீடியோவை டெலிட் பண்ணனும்னா பணம் கொடு’ன்னு கேட்டிருக்கானுங்க. பணம் இல்லைன்னு சொன்னதால அந்தப் பெண் அணிந்திருந்த செயினைப் பறிச்சிக்கிட்டு, ‘இனிமேல் நாங்கள் கூப்பிடும்போதெல்லாம் நீ வரணும். கேட்கும்போதெல்லாம் பணம் தரணும். இல்லைன்னா வீடியோவைப் பரப்பிடுவோம்’னு மிரட்டிட்டு எஸ்கேப் ஆகியிருக்கானுங்க. உமா இதைச் சொன்னதும் நாங்க ஆடிப்போயிட்டோம். உமா மூலமாவே அவனுங்களை வரவெச்சு பிடிச்சோம். அவனுங்க செல்போனைப் பிடுங்கிப் பார்த்ததும் அதிர்ச்சியாகிட்டோம். அதுல 120-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துச்சு. பள்ளிக்கூடப் பெண்களில் ஆரம்பித்து, கல்யாணம் ஆன பெண்கள்வரை இவர்களிடம் சிக்கிச் சீரழிந்திருக்கிறார்கள். உமாவுக்கு தைரியம் சொல்லி போலீஸில் புகார் கொடுக்கவைத்தோம். அத்தனை வீடியோக்களையும் போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றனர்.

திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நான்கு பேரும் பொள்ளாச்சி நகரத்தில் நன்கு அறிமுகமான முகங்கள். இந்தக் கும்பலின் பின்னணியை விவரித்தார்கள் போலீஸார். ‘‘இந்த டீமில் திருநாவுக்கரசுவும், சதீஷும்தான் மெயின் ஆட்கள். திருநாவுக்கரசுவின் அப்பா கனகராஜுக்கு ஃபைனான்ஸ்தான் தொழில். சதீஷின் அம்மாவும் அப்பாவும் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் சாதாரண ஆட்கள். சபரி ராஜனின் அப்பா கட்டட வேலை செய்கிறவர். கோவையில் இன்ஜினீயரிங் படித்தபோது திருநாவுக்கரசுவும் சபரியும் ஹாஸ்டல் ரூம் மேட்ஸ். வசந்தகுமார்தான் திருநாவுக்கரசுவுக்கு ஆல் இன் ஆல். நான்குபேரும் சேர்ந்துதான் இந்த அராஜகத்தைச் செய்துள்ளார்கள்.

காதலிக்கிறேன் என்று சொல்லி பெண்களை ஏமாற்றி அழைத்துச்சென்று மிரட்டி, கூட்டாகச் சேர்ந்து அனுபவிப்பதுடன், ஆபாச வீடியோவும் எடுத்துப் பணம் பறித்துள்ளார்கள்.சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசுவின் வீட்டில்தான் இந்த அக்கிரமங்களை நடத்தி யுள்ளனர். திருமணமான பணக்காரப் பெண்கள் பலரும் இவர்கள் வலையில் விழுந்துள்ளதுதான் ஆச்சர்யம். பல லட்சம் கப்பம் கட்டி, தங்கள் குடும்ப மானத்தைக் காப்பாற்றி யுள்ளார்கள், பல முக்கியப் புள்ளிகள். இப்படி, தவறான வழியில் சம்பாதித்தப் பணத்தில் சதீஷ் பொள்ளாச்சியில் 70 லட்சம் ரூபாய்க்கு இரண்டு வீடுகள் வாங்கியிருக்கிறான். பொள்ளாச்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு துணிக்கடையும் சதீஷுக்கு உள்ளது. பல லட்ச ரூபாய் ஃபைனான்ஸுக்கு விட்டிருக்கிறான்” என்றார்கள்.

சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறை வாக இருக்கும் திருநாவுக்கரசு, ‘‘இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளன. விரைவில் உண்மையைச் சொல்வேன்’’ என வாட்ஸ்அப் தகவல் வெளியிட்டுள்ளான்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடேசனிடம் பேசினோம். “மூன்று தனிப்படைகள் அமைத்து, திருநாவுக்கரசைத் தேடிவருகிறோம். அவனைப் பிடித்தால்தான் இதைப்பற்றித் தெளிவாகச் சொல்ல முடியும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் தைரியமாகப் புகார் கொடுங்கள் என்று அறிவித்துள்ளோம். இந்த வழக்கில் எந்த அரசியல் தொடர்பும் இல்லை. அவனை விரைவில் பிடித்துவிடுவோம்” என்றார்.

பெண்கள் ஜாக்கிரதை!

- எம்.புண்ணியமூர்த்தி