Published:Updated:

கோவையில் போலி டிரைவிங் லைசென்ஸ் தயாரித்த 8 பேர் கைது (படங்கள்)

கோவையில் போலி டிரைவிங் லைசென்ஸ் தயாரித்த 8 பேர் கைது (படங்கள்)
கோவையில் போலி டிரைவிங் லைசென்ஸ் தயாரித்த 8 பேர் கைது (படங்கள்)

கோவை: கோவையில் போலி டிரைவிங் லைசென்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டதாக பெண் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 150 போலி டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
 

கோவையில் போலி டிரைவிங் லைசென்ஸ் தயாரித்த 8 பேர் கைது (படங்கள்)

கோவையில் போலி லைசென்ஸ் தயாரிக்கும் கும்பல் இருப்பதாகவும் இவர்கள் மூலம் போலி லைசென்ஸ் புழக்கத்தில் விடப்படுவதாகவும் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் அளித்த புகாரின் பேரில் கோவை குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
 

கோவையில் போலி டிரைவிங் லைசென்ஸ் தயாரித்த 8 பேர் கைது (படங்கள்)

இந்த விசாரணையின் போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் மகாலட்சுமி, நிவாஸ், சரவணக்குமார் ஆகியோரையும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்களாக செயப்படும் அப்துல்லாத், செந்தில் வேல், முகமது பெரோஸ்கான், ராஜன், சையதுஅபுதாகீர் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

##~~##
இவர்களிடம் இருந்து 150 போலி லைசென்ஸ்கள், அவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரிண்டர் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
 
கோவையில் போலி டிரைவிங் லைசென்ஸ் தயாரித்த 8 பேர் கைது (படங்கள்)

கலாவதி தேதிகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த போலி லைசென்ஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் உதவியுடன் புதுப்பித்து வழங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. போலி லைசென்ஸ் தயாரித்த சம்பவத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் தொடந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ச.ஜெ.ரவி