Published:Updated:

''இளைஞர் அணிச்செயலாளர் ஆகப் போகிறேனா?''

'பொடி' வைக்கும் உதயநிதி

##~##

'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலம் அடைவார் என்று எதிர்பார்த் தால், நிலஅபகரிப்பு வழக்கில் சிக்கி மீடியா வெளிச்சத்துக்கு வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின்.+ 

'ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ மூலமாக சினிமா தயாரித்து வருகிறார் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி. ஸ்டாலின் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சேஷாத்ரி குமார் என்பவரிடம் இருந்து வீட்டை அபகரித்ததாக, ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் மீது ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்காக வெளிநாடு சென்றிருந்த உதயநிதி, கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை போலீஸார் முன்பு ஆஜர் ஆனார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''இளைஞர் அணிச்செயலாளர் ஆகப்  போகிறேனா?''

''நிலஅபகரிப்பு விவகாரங்களில் சிக்கும் தி.மு.க-வினர் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெற்று விட்டதே?''

''என் தங்கைக்கு இரட்டைக் குழந்தைகள். அவர் களும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்ததால், குழந் தைகளைப் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த நேரத்தில் பக்கத்து வீடு காலி ஆனது. அதன் உரிமையாளர் வேணுகோபால் ரெட்டியிடம் முன்பணம் கொடுத்து, ஒப்பந்தம் போட்டு வாடகைக்குப் பிடித்தோம். அதற்கான வாடகையை முறையாக நான் செலுத்தி வருகிறேன். ஆனால், யாரோ குமார் என்பவரை மிரட்டி, குறைந்த விலைக்கு வாங்கியதாக பொய் வழக்குப் போட்டுள்ளார்கள். என் மீது புகார் கூறியுள்ள என்.எஸ்.குமார் யார் என்றே எனக்குத் தெரியாது. இதுவரை அவரை நான் நேரில் பார்த்ததே கிடையாது. யாரோ அவரைத் தூண்டி இப்படி புகார் கொடுக்க வைத்துள்ளார்கள். இதைச் சட்டப்படி எதிர்கொள்வோம்.''

''பொய் வழக்கு என்றால்... என்ன உள்நோக்கம்?

''வேறு எதற்கு? என் அப்பாவின் பெயரைக் களங்கப்படுத்தத்தான்! யாராவது இப்படி புகார் கொடுப்பார்களா என அரசுத் தரப்பில் இருந்தே, வலைவீசித் தேடி இருக்கிறார்கள். பணத்துக்கு ஆசைப் பட்டவர்கள் இரையாகி இருக்கிறார்கள். இப்போது, தாத்தா மீதும் அப்பா மீதும் யாரோ ஒருவர் புகார் கொடுத்திருக்கிறாராம். உண்மை என்ன என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.''  

''கலைஞர் குடும்பத்து சினிமா கம்பெனிகளால் அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்; ஆட்சி மாறியதும்தான் அவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய முடிகிறது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?''

''ஆட்சி மாறி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் யாராவது புது தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்களா? இல்லையே! நாங்கள் படம் எடுப்பதை நிறுத்தி விட்டோமோ? அதுவும் இல்லை! பிறகு எப்படி இந்த மாதிரி எங்கள் மீது குற்றம் சாட்ட முடியும்? யாரும் இங்கே படம் எடுக்கலாம். படம் நன்றாக இருந்தால்... ஓடும். இல்லை என்றால், தியேட் டரைவிட்டு ஓடிவிடும். 2010-ஐ விட 2011-ல் ரிலீஸான படங்கள் குறைவு. கடந்த ஏழு மாதங்களில் வந்த ஒரு சில படங்களைத் தவிர மற்றவை எல்லாமே ஃபெயிலியர். அதற்கும் நாங்கள்தான் காரணமா என்ன?

கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை!''

''அழகிரி - ஸ்டாலினுக்கு இடையிலும், ஸ்டாலின் - கனிமொழிக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்களே...''

''அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சினிமா பற்றி கேளுங்கள், நான் பதில் சொல் கிறேன். அரசியலைப் பொறுத்தவரை, நான் என் தாத்தா, அப்பாவை ஃபாலோ பண்ணுபவன். அவ்வளவுதான்!''

''நீங்கள் தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்பாளராக வரப் போவதாகச் சொல்கிறார்களே?''

''அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்... நிச்சயம் ஏற்க மாட்டேன். தலைவர் குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்துக்காக, கட்சியில் இளைஞர் அணிச் செயலாளராக வர ஆசைப்பட முடியாது. கட்சிக் காக உழைத்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் வர வேண்டும். கட்சிக்கும் அதுதான் நல்லது. இளைஞர் அணிக்கும் அதுதான் நல்லது. தலைவரோட பையன் என்பதாலேயே அப்பா அந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. படிப்படியாகத்தான் கட்சிப்பணி செய்து வந்தார். என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு தி.மு.க. உறுப்பினர், முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குநர்... அவ்வளவுதான்.''

''கட்சிப் பத்திரிகையின் பொறுப்பாளராக இருக்கிறீர்கள். ஆனால், தீவிர அரசியலில் இருந்து தள்ளி நிற்பதுபோலப் பேசுகிறீர்களே. இது முரண்பாடாக இல்லையா?''

''அரசியலில் தள்ளி நிற்கவில்லை. இப்போ தைக்கு, சினிமாவில் பிஸியாக இருக்கிறேன். எதிர் காலத்தில் என்ன நடக்கும் எனத் தெரியாது!''

கருணாநிதியைப் போலவே பொடி வைத்து முடிக்கிறார் உதயநிதி!

- இரா. தமிழ்க்கனல்

படம்: சொ.பாலசுப்ரமணியன்