Published:Updated:

சந்தியாவின் தலையைத் தேடும் டைசன் - குப்பைக் கிடங்கில் போலீஸார் சந்திக்கும் சவால்கள்

எஸ்.மகேஷ்
சந்தியாவின் தலையைத் தேடும் டைசன் - குப்பைக் கிடங்கில் போலீஸார் சந்திக்கும் சவால்கள்
சந்தியாவின் தலையைத் தேடும் டைசன் - குப்பைக் கிடங்கில் போலீஸார் சந்திக்கும் சவால்கள்

சென்னையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலை மற்றும் இடதுகை உள்ளிட்ட இடுப்புக்கு மேல் உள்ள உடல்பாகங்களை மோப்பநாய் டைசன் மூலம் குப்பைக் கிடங்கில் போலீஸார் தேடிவருகின்றனர். 

சந்தியாவின் தலையைத் தேடும் டைசன் - குப்பைக் கிடங்கில் போலீஸார் சந்திக்கும் சவால்கள்

சென்னையில் சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனின் மனைவி சந்தியா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரின் உடல்பாகங்கள் அடையாற்றிலும், குப்பைத் தொட்டிகளிலும் வீசப்பட்டன. குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்ட உடல்பாகங்களில் கை, இரண்டு கால்கள், கடந்த 21-ம் தேதி சென்னைப் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டன. இந்தவழக்கில் பாலகிருஷ்ணனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 பாலகிருஷ்ணன் கூறிய தகவலையடுத்து ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள அடையாற்றில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதியை போலீஸார் கைப்பற்றினர். ஆனால், அவரின் தலை மற்றும் இடது கை, இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளை போலீஸார் கடந்த இரண்டு தினங்களாக பெருங்குடி குப்பைக் கிடங்கில் தேடியும் கிடைக்கவில்லை. 

சந்தியாவின் தலையைத் தேடும் டைசன் - குப்பைக் கிடங்கில் போலீஸார் சந்திக்கும் சவால்கள்

இதையடுத்து தலை மற்றும் இதர உடல் பாகங்களைக் கண்டறிய பள்ளிக்கரணை போலீஸார் அடுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் மூன்றாவது நாளாக இன்றும் பெருங்குடி குப்பைக் கிடங்கில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். போலீஸார், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் தேடும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சந்தியாவின் தலையைத் தேட மோப்பநாய் டைசன் அழைத்துவரப்பட்டது. 

கண்டெடுக்கப்பட்ட உடல்பாகங்களை டைசன் மோப்பம் பிடித்தது. பிறகு பெருங்குடி குப்பைக் கிடங்கில் வள்ளூவர் கோட்டத்திலிருந்து கொட்டப்பட்ட குப்பையில் தலை மற்றும் உடல் பாகங்களை 4 மணி நேரத்துக்கு மேலாக டைசன் மூலம் போலீஸார் தேடிவருகின்றனர். ஆனால், இதுவரை எந்தவித உடல்பாகங்களும் சிக்கவில்லை என்கின்றனர் போலீஸார். தலை மற்றும் உடல் பாகங்களை எப்படியாவது டைசன் கண்டுபிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் கொளுத்தும் வெயில், குப்பையிலிருந்து வீசும் துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் போலீஸாரும் மாநகராட்சி ஊழியர்களும் தேடிவருகின்றனர். 

சந்தியாவின் தலையைத் தேடும் டைசன் - குப்பைக் கிடங்கில் போலீஸார் சந்திக்கும் சவால்கள்

கடந்த இரண்டு தினங்களாக குப்பைக் கிடங்கிலேயே முகாமிட்டுள்ள தனிப்படை போலீஸார் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். குறிப்பாக துர்நாற்றத்தின் காரணமாக சரிவர சாப்பிடக்கூட முடியாமல் சிரமப்படுகின்றனர். இருப்பினும் தலை மற்றும் இதர உடல்பாகங்களைக் கண்டுப்பிடிக்காமல் ஓயமாட்டோம் என்கின்றனர் பள்ளிக்கரணை தனிப்படை போலீஸார். குறிப்பாக சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, பெருங்குடி குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஊழியர்களோடு குப்பைகளைக் கிளறி தலை மற்றும்  உடல்பாகங்களைத் தேடிவருகிறார். தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார் ராஜேஷ், கோபால், கலைச்செல்வன், பாஸ்கரன், செல்வராஜ், ப்ரெண்ஸ் ஆப் போலீஸ் குமார் என ஒரு டீமே பெருங்குடி குப்பைக் கிடங்கில் முகாமிட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட கை, கால்களை வைத்து அடையாளம் காண்பதில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தோம். இந்த வழக்கில் எல்லோரும் துப்பு துலங்க டாட்டூ எவ்வளவு முக்கியமாக இருந்ததோ

சந்தியாவின் தலையைத் தேடும் டைசன் - குப்பைக் கிடங்கில் போலீஸார் சந்திக்கும் சவால்கள்

அதுபோலத்தான் உடல்பாகங்கள் வைக்கப்பட்ட அரிசி பையும் உறுதுணையாக இருந்தது. பாலகிருஷ்ணன், அந்த அரிசிப் பையை சைதாப்பேட்டையிலிருந்து வாங்கியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் விசாரித்தபோது அவர்கூறிய சில தகவல்கள் உடல்பாகங்களைக் கண்டறிய உதவியது. மேலும், பள்ளிக்கரணை போலீஸாருக்கு மட்டுமல்ல ஓட்டுமொத்த தமிழக போலீஸாருக்கே விடுக்கப்பட்ட சவாலாகத்தான் இந்த வழக்கை பார்த்தோம். அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம்.

விரைவில் சந்தியாவின் தலை மற்றும் இடது கையுடன் கூடிய உடல்பாகங்களைக் கண்டறிந்துவிடுவோம். எங்களிடம் கிடைத்த உடல்பாகங்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடந்துவருகிறது. அதன்மூலம் கொலை செய்யப்பட்டது சந்தியா என்பதை உறுதிசெய்துவிடுவோம். அதோடு கொலை செய்யப்படுவதற்கு முன் அவரின் செல்போனுக்கு வந்த போன் அழைப்புகளில் பாலகிருஷ்ணன் பேசியததற்கான ஆதாரங்களும் உள்ளது. மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன் இருவரும் ஒரே வீட்டில் தங்கியதைப் பார்த்த சாட்சிகளும் இருக்கிறார்கள். ஒருவேளை தலை மற்றும் இடது கையுடன் கூடிய உடல்பாகங்கள் கிடைக்கவில்லையென்றாலும் பாலகிருஷ்ணனுக்கு எங்களால் தண்டணை வாங்கிக் கொடுக்க முடியும்" என்றனர். 

தமிழக போலீஸை ஸ்காட்லாந்து போலீஸுக்குச் சமம் என்று சொல்வதுண்டு அதை சந்தியா வழக்கில் நிரூபித்துகாட்டிவிட்டனர் சென்னைப் பெருநகர போலீஸார். சந்தியாவின் கொலை வழக்கில் திறம்படத் துப்புதுலக்கிய பள்ளிக்கரணை தனிப்படை போலீஸாருக்கும் துணை கமிஷனர் முத்துச்சாமி தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கும் ராயல் சல்யூட் அடிக்கலாம்.