Published:Updated:

“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!”

“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!”
பிரீமியம் ஸ்டோரி
“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!”

- சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் குற்றச்சாட்டு

“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!”

- சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் குற்றச்சாட்டு

Published:Updated:
“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!”
பிரீமியம் ஸ்டோரி
“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!”

“தமிழகத்தையே அதிரவைத்திருக்கும்  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, எதுவுமே இல்லாமல் ஆக்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்துமுடித்துவிட்டது அ.தி.மு.க அரசு. இதில், சம்பந்தப்பட்டிருக்கும் அ.தி.மு.க புள்ளிகளைக் காப்பாற்ற அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட அலங்கோலமான நடவடிக்கைகளே, இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது என்பதை அப்பட்டமாகக் காட்டிவிட்டது” என அதிரடியாகக் குற்றம்சாட்டுகிறார் சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன்.

“புதைக்கப்படுகிறது பொள்ளாச்சி விவகாரம்!”

முன்னதாக பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாகப் பேசிய சிலர், “புகார் கொடுத்த பெண்ணின் தரப்பிலிருந்த அத்தனை பேரும் அரசியல்வாதிகளால் மிரட்டப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் இப்போது பொள்ளாச்சியிலேயே இல்லை. வெளியூரில் உள்ள உறவினர்களின் வீடுகளில் ஏதோ அவர்கள்தாம் தவறு செய்தவர்களைப்போல தஞ்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சியில் உள்ள ஒருசிலரும் அமைதியாகிவிட்டார்கள். ஆரம்பத்தில் அரசியல் தலையீடுகள் குறித்து அவ்வளவு பேசியவர்கள், இப்போது ‘எதுவுமே கேட்காதீங்க’ என்று அஞ்சி ஓடுகிறார்கள். ‘கைது செய்யப்பட்டுள்ள நான்குபேர் மட்டும்தான் இதில் குற்றவாளிகள். வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை’ என வழக்கை முடிப்பதற்கான வகையில்தான் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தலுக்குள் இந்த வழக்கு இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட வேண்டும். எந்த விவரங்களும் கசிந்துவிடக்கூடாது’ என்று சி.பி.சி.ஐ.டி-க்கு கட்டளைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி-யான பாண்டியராஜனை டிரான்ஸ்ஃபர் செய்து மக்களின் கோபத்தைத் தணிப்பதற்கான வேலைகள் தீவிரமாகி வருகின்றன” என்கிறார்கள்.

இந்தச் சூழலில், இந்த வழக்கை சி.பி.ஐ கையில் எடுக்குமா என்கிற கேள்வியும் தொக்கிநிற்கிறது. இதுதொடர்பாக சி.பி.ஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமனிடம் பேசினோம். “ஒரு விஷயம்... ‘மாநில போலீஸ் விசாரணை சரியில்லை; சி.பி.ஐ விசாரணை தேவை’ என்று பாதிக்கப்பட்ட வர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டு, அதை நீதிமன்றம் ஏற்கும்பட்சத்தில்தான் எந்தவொரு வழக்கும் சி.பி.ஐ-க்கு மாற்றப்படும். ஆனால், போலீஸைக் கையில் வைத்துள்ள தமிழக அரசே, சி.பி.ஐ விசாரணை கோரியுள்ளது. தேர்தலுக்காகத்தான் இப்படிச் செய்திருக்கிறார்கள். இதில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டதைக் கண்டித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அந்த அரசாணையைத் திருத்தம்செய்து அனுப்பச் சொல்லியிருக்கிறது. திருத்தம் செய்யப்பட்ட அரசாணை, மத்திய அரசுக்குக் கிடைக்க வேண்டும். அதன்பிறகே, அதைப் பரிசீலனை செய்து விசாரணை குறித்த முடிவை சி.பி.ஐ அறிவிக்கும். புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை மிரட்டிய ‘பார்’ நாகராஜன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சாதாரண அடிதடி வழக்கைப் போட்டுள்ளது போலீஸ். குற்றவாளிகளுக்காகப் பாதிக்கப்பட்டவர்களை அடிக்கிறவர்கள்தான் மிகப்பெரிய குற்றவாளிகள். என்னைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை அடிக்க ஆட்களைக் கூட்டிச்சென்ற பார் நாகராஜ்தான் முக்கியக் குற்றவாளி. இந்த விவகாரத்தில் மொத்த உண்மைகளையும் போலீஸ் புதைக்கப்பார்க்கிறது” என்றார் வேதனையுடன்.

சமீபத்தில் ஒரு வாசகத்தைப் பார்க்க நேர்ந்தது... ‘பொறுப்பில்லாத ஆட்சி... பொள்ளாச்சியே சாட்சி’ என்பதுதான் அது. அதை நிரூபித்துவருகிறார்கள் ஆட்சியாளர்கள்.

- எம்.புண்ணியமூர்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism