Published:Updated:

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...
பிரீமியம் ஸ்டோரி
இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

Published:Updated:
இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...
பிரீமியம் ஸ்டோரி
இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

பாலியல் குற்றவாளிகளைத் தப்பவைக்கும் பலே ‘எக்ஸ்பர்ட்’ பாண்டியராஜன்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தனது பொறுப்பற்ற செயல்களால், நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோவை எஸ்.பி பாண்டியராஜனுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய ஈஸ்வரி என்ற பெண்ணை நடுரோட்டில்வைத்து கன்னத்தில் அறைந்து இவர் நடத்திய அத்துமீறலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. இது மட்டுமல்ல... எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சுருளி மலையில் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து, காதல் ஜோடியைக் கொலை செய்த வழக்கையும் பாண்டியராஜன் மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார். அப்போதும் ஜூனியர் விகடன் இதழில் இதுகுறித்து விரிவாகப் புலனாய்வுக் கட்டுரையை எழுதியதால், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, குற்றவாளிக்கு 2018-ம் ஆண்டு தூக்குத்தண்டனையும் கிடைத்திருக்கிறது.

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேனி மாவட்டம், சுருளி அருவி சுற்றுலா மாளிகை அருகே 2011, மே 14-ம் தேதி கேட்பாரில்லாமல் ஒரு டூ-வீலர் நிறுத்தப்பட்டிருந்தது. வனத்துறையும் போலீஸும் விசாரித்ததில், தேனி அருகே கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த எழில்முதல்வன் என்கிற கல்லூரி மாணவரும், முத்துத்தேவன்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மேலும், அந்த டூ-வீலர் எழில்முதல்வனுடையது என்பது உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து மாணவ, மாணவி தரப்பில், அவர்கள் ஏற்கெனவே காணாமல்போனதாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

இதைத் தொடர்ந்து இருவரின் பெற்றோர் தரப்பினரும் தங்கள் மகன் மற்றும் மகளின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தனர். அப்போது காணாமல்போன கஸ்தூரியின் தோழி ஒருவர், ‘‘நான் என் காதலனுடன் சுருளிமலை கைலாசநாதர் குகைக்குச் சென்றேன். கஸ்தூரியும் அவரின் காதலன் எழில்முதல்வனுடன் அங்கு வந்தார். அப்போது, காட்டுக்குள்ளிருந்து ஒருவன் வந்து என்னையும் என் காதலனையும் மிரட்டிப் பணம், நகைகளைப் பறித்தான். நாங்கள் ஓடிவந்துவிட்டோம். பிறகு, எங்களுக்கு முன்னால் நடந்து சென்ற கஸ்தூரி, எழில்முதல்வனை நோக்கி அவன் சென்றான். அவர்கள் திரும்பி வரவே இல்லை” என்றார். இந்தத் தகவலின் அடிப்படையில், சுருளிமலையில் இருவரின் பெற்றோரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட, அதை வனத்துறையும் காவல்துறையும் தடுத்துவிட்டன. தொடர்ந்து மே 19-ம் தேதி,

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

அந்தக் குகையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைக்க, அங்கு அழுகிய நிலையில் ஓர் ஆண் சடலமும், நிர்வாணமாக ஒரு பெண் சடலமும் கிடப்பதைக் கண்டறிந்தனர். போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவை கஸ்தூரி, எழில்முதல்வன் ஆகியோரின் சடலங்கள் என்று தெரியவர, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மூன்று நாள்களுக்குப் பின்னர் கருநாகமுத்தன் பட்டியைச் சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர் பிடிபட்டான்.

“கஸ்தூரியும் எழில்முதல்வனும் காட்டுக்குள் தனியாக இருந்தனர். அவர்களை மிரட்டிப் பணம் கேட்டேன். பின்னர் கஸ்தூரியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றேன். எழில்முதல்வன் தடுத்தான். அரிவாளால் அவன் கழுத்தில் வெட்டினேன். இறந்துவிட்டான். தப்பிக்க முயற்சிசெய்த கஸ்தூரியைக் காலில் வெட்டினேன். பின்னர் இரண்டு கையை வெட்டித் துண்டாக்கி, முதுகிலும் வெட்டினேன். ரத்த வெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியைப் பாலியல் வன்புணர்வு செய்தேன்” என்று அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தைக் கொடுத்தான் கட்டவெள்ளை.

ஆனால், கட்டவெள்ளை மீதான குற்றச்சாட்டுகள், சாட்சிகள் அனைத்தும் போலீஸாரால் மெதுவாகக் கழற்றிவிடப்பட்டன. வழக்கின் போக்கு திசைமாறியது. அதற்கு காரணமாக இருந்தவர், அப்போது இதற்கு விசாரணை அதிகாரியாக இருந்த  உத்தமபாளையம் டி.எஸ்.பி பாண்டியராஜன் என்று புகார்கள் கிளம்பின. ஆம், இப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைப் பொறுப்பில்லாமல் வெளியிட்ட இதே கோவை எஸ்.பி பாண்டியராஜன்தான் அவர். இதுகுறித்து 26.6.11 ஜூனியர் விகடன் இதழில் “இரட்டைக் கொலை... 22 கற்பழிப்பு! போலீஸ் கூட்டணியில் சுருளி மலை கொடூரம்” என்று புலனாய்வு செய்தியை வெளியிட்டோம். தொடர்ந்து, எழில்முதல்வனின் பெற்றோர், ‘போலீஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். விவகாரம் சூடுபிடிக்கவே... சமூக அமைப்புகளும் பொதுமக்களும் இதுதொடர்பாக குரல் எழுப்பினார்கள். எனவே, வேறுவழியில்லாமல் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

அனைவரும் எதிர்பார்த்தது போலவே இந்த வழக்கில் வேகமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டது சி.பி.சி.ஐ.டி போலீஸ். அதன் மதுரை டி.எஸ்.பி-யான தயாளன் நேர்மையாகச் செயல்பட்டு, 67 சாட்சிகளை விசாரித்தார். கட்டவெள்ளைக்கு எதிராக 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார். சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில், 2018 மார்ச் 7-ம் தேதி கட்டவெள்ளைக்கு இரட்டை ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது தேனி மாவட்ட முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மேற்கண்ட வழக்கு குறித்து எழில்முதல்வனின் தந்தை தங்கநதியிடம் பேசினோம். “பொள்ளாச்சி வழக்கிலும் நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, உண்மையான அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். என் மகன் கொல்லப்பட்ட வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த போலீஸ், குற்றவாளியைத் தப்பவைக்கத் திட்டமிட்டு, வழக்கை மூடப்பார்த்தது. அந்த நேரத்தில்தான், ஜூனியர் விகடன் இதழில் இதுகுறித்து வெளியான கட்டுரையில் கொலைக்கான காரணம், போலீஸார் குற்றவாளியைத் தப்பவைக்கத் திட்டமிடுவது ஆகியவை வெளியாகின. அதைப் படித்தபின்புதான் நாங்கள் சி.பி.சி.ஐ.டி விசாரணையைக் கேட்டோம். அதன்படி, வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. எங்களுக்கு நியாயமும் கிடைத்தது. இல்லையென்றால் குற்றவாளியை போலீஸாரே தப்பிக்கவிட்டிருப்பார்கள்” என்றார்.

இப்போது பொள்ளாச்சி... அப்போது சுருளிமலை...

அப்போது இந்த வழக்கைத் திறம்பட விசாரித்த சி.பி.சி.ஐ.டி மதுரை டி.எஸ்.பி தயாளன் தமிழ்செல்வன், தற்போது பணி ஓய்வுபெற்று மதுரையில் வசிக்கிறார். அவரிடம் பேசினோம். “என் சர்வீஸில் முக்கியமான வழக்கு அது. குற்றவாளியை போலீஸார் பிடித்திருந்தனர். ஆனாலும், போலீஸார் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் கோரியதால், எங்களிடம் அந்த வழக்கு வந்தது. இந்தச் சம்பவத்தை ஒருவர் மட்டுமே செய்திருக்க முடியுமா என்ற கோணத்தில்தான் எங்கள் விசாரணையை முதலில் ஆரம்பித்தோம். பலரிடம் பேசி, விசாரித்து,  பல கோணங்களில் ஆராய்ந்து, பின்னர் குற்றவாளிமீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தோம். சி.பி.சி.ஐ.டி வசம் இந்த வழக்கு வந்ததால்தான் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கிடைத்துள்ளது” என்றார் பெருமையுடன்.

கோவை எஸ்.பி-யான பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தினால், இதுபோல இன்னும் பல விவகாரங்கள் வெளியே வரும்போல தெரிகிறது!

- எம்.கணேஷ்
படம்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism