Published:Updated:

`விலையில்லா கறவை மாடு வழங்குவதில் முறைகேடு!’- கிராம மக்கள் புகார்

`விலையில்லா கறவை மாடு வழங்குவதில் முறைகேடு!’-  கிராம மக்கள் புகார்
`விலையில்லா கறவை மாடு வழங்குவதில் முறைகேடு!’- கிராம மக்கள் புகார்
தமிழக அரசு வழங்கும் விலையில்லா கறவை மாடு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்திருப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலங்கச் செய்திருக்கிறது.
`விலையில்லா கறவை மாடு வழங்குவதில் முறைகேடு!’-  கிராம மக்கள் புகார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் வீரனேந்தல் ஊராட்சியைச் சேர்ந்தவர் ராக்கு .இவர்  தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு  அளித்தனர். அதில், ``திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் வீரனேந்தல் ஊராட்சியில் 2018-19-ம் ஆண்டுக்கான  தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில்  பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளன. அதில் கிராம சபைக்கூட்டத்தில் வைத்து பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை. மேலும், தேர்வுக் கமிட்டியினர் அரசியல்வாதிகளின் சிபாரிசுபடி  பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளனர்.
மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பட்டியலில் உள்ளவர்களைத் தேர்வு செய்யாமல், பல ஏக்கர் நிலங்கள், வசதி படைத்தோருக்கு வழங்கியுள்ளனர். மேலும், ஊராட்சிக்குட்பட்டவர்களுக்கு வழங்காமல் வெளியூரில் வசிப்போரை தேர்வு செய்துள்ளனர். அந்த ஊராட்சியில் உள்ள விதவை, தாழ்த்தப்பட்டோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விகிதாசார அடிப்படையில் வழங்காமல் பல்வேறு முறைகேடுகளுடன் பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளனர். தகுதியற்ற 40 பயனாளிகளைத் தேர்வு செய்துள்ள பயனாளிகள் பட்டியலை ரத்து செய்வதோடு அரசுப் பணம் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் வீணடிக்கப்படுவதை தடுத்தும் அரசாங்க விதிமுறைகளை முறையாக பின்பற்றி தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.