Published:Updated:

ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

சாதிக் பாட்ஷா மனைவி புகார்...

ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

சாதிக் பாட்ஷா மனைவி புகார்...

Published:Updated:
ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தற்கொலை செய்துகொண்டார் சாதிக் பாட்ஷா. அவருடைய மனைவி ரேகா பேகம், ‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரால் தன் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று காவல் நிலையப் படியேறி இருப்பது பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. இதுகுறித்து, கடந்த 6.2.19 தேதியிட்ட இதழிலில் மிஸ்டர் கழுகு பகுதியில்,  “அ.தி.மு.க., பி.ஜே.பி தரப்பு ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மர்ம மரண விவகாரத்தை விடப்போவதில்லை. அவரது மனைவியை வைத்து, தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கும் ஏற்பாடுகளும் நடக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தோம். அப்போது சொன்னதுதான் இப்போது தொடங்கியிருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப் பட்டனர். பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று  அவர்களை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலைசெய்தது. இவர்களின் விடுதலைக்கு எதிராக சி.பி.ஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்சத்தில் இருந்த போது, இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவரும், ஆ.ராசாவின் நண்பருமான சாதிக் பாட்ஷா, 2011-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி சென்னை, தேனாம் பேட்டையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலையை சி.பி.ஐ-யும் உறுதிசெய்தது. இந்நிலையில், சாதிக் பாட்ஷாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களிலேயே, ‘தி.மு.க தலைவர்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என்று சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறது சாதிக் பாட்ஷாவின் குடும்பம்.

ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

சாதிக் பாட்ஷாவின் மனைவி ரேகா பேகத்திடம் பேசினோம். “கடந்த மார்ச் 19-ம் தேதி இரவு, அசோக் நகரிலுள்ள என் தோழியைச் சந்தித்துவிட்டு நானும், என் தம்பியும் காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் காமாட்சி மருத்துவமனை அருகே வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் எங்கள் காரை கத்தி, கற்கள் கொண்டு தாக்கினார்கள். இருட்டாக இருந்ததால், அவர்கள் யாரென்று தெரியவில்லை. நாங்கள் வேகமாகத் தப்பிவந்துவிட்டோம். உடனடியாக 100-க்கு போன் செய்து போலீஸாரிடம் விஷயத்தைக் கூறினோம். இதன் தொடர்ச்சியாகத்தான் காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்தேன். க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில், என் கணவருக்கு இருந்த பங்குக்கான பணத்தைக் கடுமையாகப் போராடித்தான் பெற்றேன். அப்போதிருந்தே ஆ.ராசாவுக்கும் எங்களுக்கும் பகையாகிவிட்டது.

கடந்த மார்ச் 16-ம் தேதி, என் கணவரின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. பிரபல செய்தித் தாள்களில், ‘கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு என் கணவர் உதாரணமாகிவிட்டார்’ என்றும் விளம்பரம் செய்திருந்தோம். இதன் தொடர்ச்சியாகத்தான் எங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இருப்பதாகச் சந்தேகிக்கிறோம். எங்களது புகாரிலும் அதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். உடனடியாக என் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கிய சென்னை காவல் ஆணையர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். கணவரை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் ஒவ்வொரு நாளையும் மரண பயத்திலேயே கழிக்கிறேன். எங்கள் உயிருக்கு அரசு உரிய பாதுகாப்பைத் தர வேண்டும்” என்றார் கண்ணீருடன்.

ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

இதுதொடர்பாக விளக்கமளித்த தி.மு.க வட்டாரங்கள், “இந்தச் சம்பவத்துக்கும் தி.மு.க-வுக்கும் தொடர்பில்லை. குறிப்பாக ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரின் பெயர்களை வேண்டுமென்றே புகாரில் சேர்த்திருப்பது தேர்தல் நாடகம்தானே தவிர, இதில் எள்ளளவும் உண்மை இல்லை. தேர்தல் பணிகளே ஒவ்வொருவருக்கும் தலைக்குமேல் இருக்கிறது. இதில் இவர்கள் குடும்பத்தைத் தேடிச் சென்று தாக்குவதாகக் கூறியிருப்பது அபத்தம். எந்த விசாரணைக்கும் தி.மு.க தயார்” என்றார்கள்.

ஆ.ராசா தரப்பில் பேசியவர்களோ, “சாதிக் பாட்ஷாவின் குடும்பத்தினரை முழுமையாக இயக்குவது ஆளும் அ.தி.மு.க-தான். இந்தத் தேர்தலில் தோல்வி பயத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல், இப்படி எல்லாம் அவதூறு கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள்.

ஸ்டாலின், ஆ.ராசாவால் எங்கள் உயிருக்கு ஆபத்து!

போலீஸ் தரப்பில் பேசினோம். “புகாரின் அடிப்படையில், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். பொதுவாக, அந்தப் பகுதியில் குடிகாரர்களும் சில சமூகவிரோதிகளும் அடிக்கடி இப்படி கல்லை எறிவது வழக்கம் என்று அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள். பல்லாவரம், ஊரப்பாக்கம் பகுதிகளில் புறநகர் ரயில்மீதுகூட இப்படி கல்லை எறிந்து, பயணிகள் காயம் அடைந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும், இதில் அரசியல்ரீதியான உள்நோக்கம் எதுவும் இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்” என்றவர்களிடம் “ஸ்டாலின், ஆ.ராசா மீது புகார் அளித்திருப்பதால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதா?” என்று கேட்டோம். “முகாந்திரம் இல்லாமல் அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்ய முடியாது” என்றார்கள். 

நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை!

- ந.பொன்குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism