Published:Updated:

டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!

டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!
பிரீமியம் ஸ்டோரி
News
டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!

டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில், ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து அளிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். தேர்தல் பரபரப்புக்கு இடையே இந்தத் தீர்ப்பு குறித்தும் பெரிய அளவில் பேசப்பட்டது.

வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள ரஹ்மான் நகரில் குடியேறினார் ஜீவஜோதி. தற்போது அதே பகுதியில் மகளிர் தையலகம் ஒன்றையும், தன்னுடைய மகன் பெயரில் அசைவ ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஜீவஜோதியின் கணவர் தண்டாயுதபாணி அப்பளம், ஊறுகாய் போன்ற உணவுப்பொருள்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்கிறார். ஜீவஜோதி விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரைச் சந்தித்தோம்.

டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!

‘‘இந்த வழக்கு பற்றி?’’

``சாந்தகுமார் கொலை செய்யப் பட்டது தெரிந்த உடனே, நான் முதலில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. நீதி கேட்டு போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவைப் பார்த்து மனுகொடுத்தேன். அவரைப் பார்த்ததுமே என்னையும் அறியாமல் கண்களில் நீர் கொட்டியது. என் மனுவை வாங்கிக் கொண்டவர் எதுவுமே சொல்லாமல் கடந்துவிட்டார். பின்னாளில் கொலை வழக்குக்கு எனத் தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அன்று நான் வடித்த கண்ணீரைத் துடைக்க அன்றே வித்திட்டவர் ஜெயலலிதா. அவர் இருந்திருந்தால், தீர்ப்பு வந்தவுடன் அவரைப் பார்த்துக் காலில் விழுந்து கண்ணீர்விட்டு நன்றி சொல்லியிருப்பேன்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!

‘‘தீர்ப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’’

``இந்தக் கொலை வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் தீர்ப்பு வர இருந்தது. அதற்கு சில தினங்களுக்கு முன்பு, வழக்கில் இருந்து விடுதலை பெறுவதற்காகக் குற்றவாளியான ராஜகோபால், கும்பகோணம் பிரித்தியங்கராதேவி கோயிலில், யாகம் வளர்த்து பூஜை செய்தார். இது தெரியாமல் அடுத்தநாள் நானும் அதே கோயிலுக்குச் சென்று பூஜை செய்தேன். கோயில் குருக்கள், ‘இரண்டு பேருமே வந்து வேண்டுகிறீர்கள். யாருக்குத்தான் தெய்வம் உதவி செய்யும்?’ என்று கேட்டார். அதற்கு, ‘தெய்வம் உண்மையின் பக்கம் நிற்கும்’ என்றேன். அதேபோல், அவருக்குத் தண்டனை கிடைத்தது. பின்னர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்றார்கள். அடுத்த ஒன்பது ஆண்டுகள் கழித்து, இப்போது அந்தத் தண்டனையை உறுதிசெய்துள்ளது தீர்ப்பு. 18 ஆண்டுகள் பெரும் போராட்டத்தோடு வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன். தண்டனை கிடைக்கக் காரணமான நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி.’’

‘‘சாந்தகுமார் பற்றி?’’

``அவருக்காகத்தான் இவ்வளவுப் போராட்டமும். இந்தத் தீர்ப்பு அவர் மரணத்துக்குக் கிடைத்த வெற்றி. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், ராஜகோபால் தரப்பிலிருந்து எவ்வளவோ சமாதானம் பேசினார்கள். லட்சங்களில்... கோடிகளில் பணம் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் நான்,  ‘கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்’ என்று உறுதியாக இருந்தேன்.’’

டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!

‘‘ஒரு பெண்ணாக வழக்கை எப்படி எதிர்கொண்டீர்கள்?’’

``பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். பணபலம் படைத்த ராஜகோபாலுக்கு எதிராக ஒரு பெண்ணாக நின்று போராடினேன். இதில் என்னைப்பற்றித் தப்பாகப் பேசினார்கள். என் பக்கம் இருந்த நியாயத்தையும் உண்மையையும் இந்தத் தீர்ப்பு வெளி உலகுக்குக் காட்டியுள்ளது. இந்தத் தீர்ப்பு எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.’’

‘‘பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’

``நம்மைப் பற்றித் தவறாகப் பேசுவார்கள் எனப் பயந்துகொண்டே பல பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை வெளியே சொல்லாமல் முடங்கிக்கிடக்கின்றனர். அப்படி இருக்காதீர்கள்... துணிவுடன் வெளியே வாருங்கள். ஒரு பெண் பிரச்னையில் மாட்டிக் கொண்டால், அந்தப் பெண்ணின் குடும்பம் அவளுக்கு எல்லாவிதத்திலும் ஒத்துழைத்தாலே போதும். சமூகத்தில் பெண்கள் தைரியமாக வெளியே வருவார்கள். எதையும் சாதிப்பார்கள்.’’

டி.டி.வி தனித்துவமானத் தலைவர்! - சரவண பவன் தீர்ப்பும்... ஜீவஜோதி அறிவிப்பும்!

‘‘அ.ம.மு.க-வில், நீங்கள் சேரவிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

``நான் ஜெயலலிதாவின் தீவிர ரசிகை. அவருடைய ஆளுமை எனக்கு ரொம்பவே பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே ஒரு தடவையாவது ஜெயலலிதாவை நேரில் பார்த்துவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால், புகார் கொடுக்க அவரைப் போய்ப் பார்ப்பேன் என நினைக்கவில்லை. ஆனால், இன்று அவர் இல்லாததுப் பெரும் வருத்தம். அவருக்கு அடுத்தபடியாக டி.டி.வி தினகரனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்றைக்கு உள்ள அரசியல் தலைவர்களில் அவர் தனித்துவ மானவர். எதிர்காலத்தில் என்ன நடக்கிறதோ... பார்ப்போம்.’’

- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்