Published:Updated:

சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்: ப. சிதம்பரம்

சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்: ப. சிதம்பரம்
சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்: ப. சிதம்பரம்
சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்: ப. சிதம்பரம்

புதுடெல்லி: சிபிஐ அமைப்புக்கு மத்திய அரசு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் கூறியதாவது:

சிபிஐ அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள எனது தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு, விரைந்து பரிசீலித்து சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும்.

ஆனாலும், சிபிஐக்கு கண்காணிப்பு அமைப்பு ஒன்று வேண்டும். அந்த அமைப்பு உச்ச

##~~##
நீதிமன்றத்தின் கீழ் செயல்படும். அதாவது, சிபிஐயின் விசாரணையில் எந்த ஒரு அமைப்பும் தலையிட முடியாத வகையில் தன்னாட்சி அதிகாரம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.