Published:Updated:

புல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை!

புல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை!
புல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர் ஒத்திகை!

இந்திய விமானப்படை வீரர்கள் எல்லையில் மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதல். இருபது ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தாக்குதல் நடந்தேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. பல்வேறு பாதுகாப்புகளையும் மீறி 350 கிலோ வெடிமருந்துகள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்ற கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்படுகின்றன.

கணவனையும், மகனையும், தந்தையும் இழந்து தவிக்கின்றது சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்கள். 44 பேரைக் காவு வாங்கிய தற்கொலைப்படை தாக்ககுலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது  என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் வழக்கம்போல இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கைவிரித்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதலின் எதிரொலியாகப் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் வர்த்தக ரீதியான சலுகைகள் துண்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் போர் ஒத்திகை இந்திய விமானப்படை சார்பில் நடந்துள்ளது. பாகிஸ்தானை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் விமானப்படை சார்பில் மிகப்பெரிய அளவில் ஒத்திகை நடைபெற்றுள்ளது. பயிற்சியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு, இலக்கைத் துல்லியமாக தாக்கி அளித்தன. மொத்தம் 137 விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ராணுவத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். விமானப்படையின் முழுபலத்தை உணர்ந்தும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.