Published:Updated:

இதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்! - கும்பகோணத்தில் பரபரப்பு

இதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்! - கும்பகோணத்தில் பரபரப்பு
இதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்! - கும்பகோணத்தில் பரபரப்பு

கும்பகோணம் அருகே கல்லுாரி மாணவியை இதயத்துக்காக கடத்தப்பட்டிருப்பதாகவும் உடலை அனுப்பி வைக்க விலாசமும், 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டும் வந்த குறுஞ்செய்தியால் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்! - கும்பகோணத்தில் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் விளத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சுபஸ்ரீப்ரியா. 18 வயதான இவர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரியில் பி.எஸ்ஸி. முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று கல்லுாரிக்குச் செல்வதற்காகச் சென்ற சுபஸ்ரீப்ரியா, இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரின் தாய் சித்ரா, மகள் செல்போனுக்கு பலமுறை போன் செய்தும் சுபஸ்ரீப்ரியா போனை எடுக்கவில்லை.  

இந்த நிலையில், இரவு 10.53 மணியளவில் காணாமல் போன சுபஸ்ரீப்ரியா மொபைலில் இருந்து அவரின் உறவுப் பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் இந்தப் பெண்ணைக் கடத்தி விட்டோம், அவரது இதயம் தேவைப்படுகிறது. அத்துடன் `வீட்டின் முகவரியை கொடுங்க, உடலை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். அதற்கு 30 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. அந்தக் குறுஞ்செய்தி தெளிவாகவும் டைப் செய்யப்படவில்லை. இதையடுத்து உறவுப் பெண், சுபஸ்ரீப்ரியாவின் தயார் சித்ராவிடம் அந்தத் தகவல் குறித்து கூறியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சித்ரா, தன் மகளைக் காணவில்லை என பந்தநல்லுார் போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிசிடிவி. கேமரா பதிவுகளைக் கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.