Published:Updated:

தந்தையைப் பழிவாங்க மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 15 வயது சிறுவன்... அதிர்ச்சி சம்பவம்!

பாலியல் வன்கொடுமை

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.

தந்தையைப் பழிவாங்க மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 15 வயது சிறுவன்... அதிர்ச்சி சம்பவம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே கல்யாணி மேற்கு பகுதியிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்ததில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. அந்தச் சிறுவனை அவன் குடியிருந்த பகுதிக்குச் சென்று காவல்துறை கைதுசெய்தது. அவனிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்ரன.

இது தொடர்பாக காவல்துறை செய்தியாளர்களிடம்,``கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதில் சிறுவன், சிறுமியின் தந்தையால் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்குப் பழிவாங்க வேண்டுமென முடிவுசெய்த சிறுவன், அவரின் 9 வயது மகளான சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பிளேடால் அந்தச் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலைசெய்திருக்கிறான்" எனத் தெரிவித்திருக்கிறது.

குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் மகாத்மா பூலே போலீஸார் வழக்கு பதிவுசெய்து சிறுவனைக் கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.