Published:Updated:

சிறார் வதை, வாயில் ஆசிட் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரம்; டெல்லி சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்!

Violence Against Girl Child (Representational Image) ( Pixabay )

சிறுமி தான் சிறார் வதை செய்யப்பட்டதை வீட்டில் யாரிடமாவது சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில், பணி முடிந்து சாலையில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த சிறுமியின் வாயில் ஜெய் பிரகாஷ் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

சிறார் வதை, வாயில் ஆசிட் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரம்; டெல்லி சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்!

சிறுமி தான் சிறார் வதை செய்யப்பட்டதை வீட்டில் யாரிடமாவது சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில், பணி முடிந்து சாலையில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த சிறுமியின் வாயில் ஜெய் பிரகாஷ் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

Published:Updated:
Violence Against Girl Child (Representational Image) ( Pixabay )

தலைநகர் டெல்லியில் 15 வயதுச் சிறுமி சிறார் வதைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சம்பவத்தை பெற்றோரிடம் சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில், சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stop Violence against women (Representational Image)
Stop Violence against women (Representational Image)
Unsplash

மேற்கு டெல்லியில் நங்கோலாய் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி செருப்பு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். தொழிற்சாலையின் மேலாளரான 31 வயதுடைய ஜெய் பிரகாஷ், தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, வீட்டு வேலைகளுக்கு உதவியாக கடந்த ஜூலை 5-ம் தேதி சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அன்றே சிறுமியை சிறார் வதைக்கு உள்ளாக்கியுள்ளார் ஜெய் பிரகாஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பவம் நடந்த சில தினங்களுக்குப் பிறகு, சிறுமி தான் சிறார் வதை செய்யப்பட்டதை வீட்டில் யாரிடமாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தில், பணி முடிந்து சாலையில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த சிறுமியின் வாயில் ஜெய் பிரகாஷ் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றியுள்ளார். அதன் பின், சாலையிலிருந்து வீடு நோக்கி ஓட்டம் பிடித்த சிறுமி, வீட்டை அடைந்ததும் மயங்கியுள்ளார்.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)

அதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமியை பெற்றோர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க, தற்போது சிகிச்சைபெற்று வருகிறார். சிறுமியின் தந்தை நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார். புகாரையடுத்து, சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்ற காவல்துறையினர், ஜெய் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து பேசியுள்ள டெல்லி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், ``ஜெய் பிரகாஷ் சிறுமியின் வாயில் ஊற்றியது ஆசிட்தானா என்பது நிரூபணமாகவில்லை. சிறுமியின் வாக்குமூலம் மற்றும் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளை வைத்து, ஜெய் பிரகாஷ் மீது ஐபிசி 307, 376, 34 மற்றும் போக்சோ பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருக்கிறார்.

Sexual Harassment (Representational Image)
Sexual Harassment (Representational Image)

இந்தச் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையம், சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி, டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால், `15 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழந்தையைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளதாகவும் மகளிர் ஆணையத்துக்கு முக்கிய புகார் வந்துள்ளது. சிறுமியை கொலை செய்வதற்காக, ஆசிட் குடிக்க வற்புறுத்தப்பட்டுள்ளார். மகளிர் ஆணையம் சிறுமிக்கும், சிறுமியின் குடும்பத்துக்கும் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Harassment
Harassment

நாட்டின் தலைநகரான டெல்லியில், இது போன்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.