Published:Updated:

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: வெளிநாட்டு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியின் ஹம்மர் காரை, சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்ததாக கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் உள்ள தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவர் நண்பர் ராஜா சங்கர் உள்ளிட்டோர் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஸ்டாலின் வீட்டில் இருந்த ஹம்மர் ரக காரை ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வைத்திருந்தது தெரியவந்தது.

அதே நாளில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், கார் ஏதும் இல்லை எனத் திரும்பிச் சென்றனர். மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறுவதாக அறிவித்த அடுத்த நாளே, இச் சோதனை நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கேரள மாநிலம் திருவில்லாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் 480க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கார்களை ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்து, இறக்குமதி செய்து தொழிலதிபர்களுக்கு கொடுத்துள்ளது தெரிய வந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோசப்பை தேடி வருகின்றனர். இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் உதயநிதி ஸ்டாலினின் ஹம்மர் ரக காரை அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் 2 நாள்களுக்கு முன்பு ஒப்படைத்தார்.

##~~##
வரி ஏய்ப்பு செய்து அந்தக் கார் இறக்குமதி செய்யப்பட்டதால், அவரே அந்தக் காரை முன்வந்து ஒப்படைத்ததாக சி.பி.ஐ. தரப்பில் கூறப்படுகிறது.
காரை ஒப்படைத்த பின்னர் உதயநிதி ஸ்டாலின் கோவை பறந்து சென்றார். அங்கு, "இது கதிர்வேலன் காதல்" படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சுமார் மாதத்திற்கு பிறகுதான் சென்னை திரும்புவார் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.