Published:Updated:

`நிலத்தை அபகரித்து கொலைமிரட்டல் விடுக்கிறார்!’ - அ.தி.மு.க நிர்வாகியைக் கண்டித்துத் தீக்குளிக்க முயன்ற விவசாயி

`நிலத்தை அபகரித்து கொலைமிரட்டல் விடுக்கிறார்!’ - அ.தி.மு.க நிர்வாகியைக் கண்டித்துத் தீக்குளிக்க முயன்ற விவசாயி
`நிலத்தை அபகரித்து கொலைமிரட்டல் விடுக்கிறார்!’ - அ.தி.மு.க நிர்வாகியைக் கண்டித்துத் தீக்குளிக்க முயன்ற விவசாயி

கரூரில் விவசாயி ஒருவர், தனது நிலத்தை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அபகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

`நிலத்தை அபகரித்து கொலைமிரட்டல் விடுக்கிறார்!’ - அ.தி.மு.க நிர்வாகியைக் கண்டித்துத் தீக்குளிக்க முயன்ற விவசாயி

கரூர் மாவட்டம், தோகைமலை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளாரான கே.ஆர்.விஜயன். இவரின் உறவினர் முருகேசன். விவசாயியாக இருக்கிறார். அருகில் உள்ள வடசேரி என்ற கிராமத்தில் உள்ள பாலசமுத்திரம் என்ற பகுதியில் வசித்து வருகிறார் முருகேசன். இவரின் குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் அப்பகுதியில் சுமார் 1 ஏக்கர் 10 சென்ட் உள்ளது. இதை உறவினர்கள் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலரை வைத்து அளந்து பிரித்துக்கொண்டதாகத் தெரிகிறது. இதில், முருகேசன் தனது பங்கு நிலத்தை அபகரிக்கும் நோக்கில் உறவினர்களான ரஞ்சனி, ராஜேந்திரன், வீரமலை, பழனிசாமி மற்றும் அ.தி.மு.க தோகைமலை ஒன்றியச் செயலாளரான விஜயன் உள்ளிட்டோர் செயல்பட்டு வருவதாக முருகேசன் குற்றம்சாட்டி வந்தார். இதுதொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டபோது தன்னை துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குமுறினார்.

தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட முருகேசன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்து, தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். அதைப் பார்த்துப் பதறிய, தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், முருகேசனைத் தடுத்து, மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் முறையிட அழைத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு), பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் கணேஷ் மற்றும் குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் ஆகியோர் முருகேசனிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர், `நிலம் தொடர்பாக நாளை சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை செய்து, தேவைப்பாட்டால் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறியதின் அடிப்படையில் முருகேசன் திரும்பிச் சென்றார்.

`நிலத்தை அபகரித்து கொலைமிரட்டல் விடுக்கிறார்!’ - அ.தி.மு.க நிர்வாகியைக் கண்டித்துத் தீக்குளிக்க முயன்ற விவசாயி

பின்னர் நம்மிடம் பேசிய முருகேசன்,``நான் ஏழை விவசாயி. என் உறவினர்கள் என் பங்கு நிலத்தை அ.தி.மு.க தோகைமலை ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.விஜயனை வைத்து மிரட்டி, அபகரித்துவிட்டனர். தட்டிக் கேட்ட என்னைக் கொன்றுவிடுவதாக விஜயன் மிரட்டினார். இதுசம்பந்தமாக, தோகைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனா, நடவடிக்கை எடுக்கலை. அதனால்தான், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறதா சொல்லி இருக்காங்க. அப்படி நடவடிக்கை எடுக்கலன்னா, என் சொத்தை அபகரித்து, எனக்கு கொலைமிரட்டல் விடுக்கும் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் விஜயன் வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை பண்ணிக் கொள்வேன்’’ என்றார் ஆக்ரோஷமாக.

இதுசம்பந்தமாக, தோகைமலை ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கே.ஆர்.விஜயன் தரப்பில் பேசினோம். ``அது அவர்களது உறவினர்களுக்குள் உள்ள நிலப்பிரச்னை. அதுல எங்கண்ணன் மூக்கை நுழைக்கலை. ஏன் முருகேசன் விஜயன் பேரை இழுக்கிறார்ன்னு புரியலை" என்றார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.