Published:Updated:

ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கின் சிபிஐ விசாரணை குழு தலைவரும், எஸ்.பி.யுமான விவேக் தத் என்ற அதிகாரி ரூ. 7 லட்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான விசாரணையில் இருந்து வேறுபட்ட நிலத்தகராறு தொடர்பான வழக்கை நீர்த்துப் போக செய்வதற்காக, விவேக் தத் இந்த லஞ்சத்தை வாங்கியுள்ளார்.

இவ்விவகாரம் சி.பி.ஐ. துறையின் உட்பிரிவு புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா நேரடி மேற்பார்வையில் நடைபெற்ற தீவிர கண்காணிப்பில், சி.பி.ஐ. விரித்த வலையில் சி.பி.ஐ. எஸ்.பி. விவேக் தத், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலக வாசலில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

##~~##
இந்த கைது தொடர்பான விபரங்களை வரும் திங்கட்கிழமையன்று உச்ச நிதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்கும்.
லஞ்சம் வாங்கிய சி.பி.ஐ. அதிகாரி நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான விசாரணையை இனியும் தொடர்வது சரிதானா? என்ற சர்ச்சை எழும் என்பதால், விசாரணை அதிகாரியாக வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் எனத்தெரிகிறது.