Published:Updated:

மதுரையில் அரசு அதிகாரியின் தாய் கொலை

மதுரையில் அரசு அதிகாரியின் தாய் கொலை
மதுரையில் அரசு அதிகாரியின் தாய் கொலை
மதுரையில் அரசு அதிகாரியின் தாய் கொலை

மதுரை: மதுரையில் பி.எஸ்.என்.எல். அதிகாரியின் தாயை, பாலித்தீன் கவரால் முகத்தை மூடி மூச்சை நிறுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எஸ்.ஆலங்குளம் சாஸ்தா நகர் -முதல் தெருவைச் சேர்ந்தவர் குணவதி. இவரது மகன் தேனி மாவட்டம் போடியில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். குணவதி மட்டும் மதுரை வீட்டில் தனியே தங்கி இருக்கிறார்.

இதை அறிந்த மர்ம ஆசாமிகள் நேற்று இரவு வீடு புகுந்து குணவதியைத் தாக்கியுள்ளனர். பின்னர் முகத்தில் பாலித்தீன் கவரைக் கட்டி மூச்சை நிறுத்திக் கொலை செய்து விட்டுத் தப்பியோடி இருக்கிறார்கள்.

தகவல் அறிந்ததும் மதுரை கூடல்புதூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப் பட்டனர். இந்தக் கொலை எதற்காக நடந்தது என்று தெரியவில்லை. குணவதி தனியாக இருப்பதை அறிந்து ஏதாவது கொள்ளைக் கும்பல் வீட்டில் கொள்ளையடிக்க இந்த கொலையை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

##~~##
இருப்பினும் போடியில் இருக்கும் குணவதியின் மகன் வந்த பிறகு தான் வீட்டில் இருந்து ஏதாவது நகை, பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மதுரை புறநகர் பகுதியில் தினமும் நடைபெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.

- கே.கே.மகேஷ்