Published:Updated:

தூத்துக்குடியில் பாகிஸ்தான் கொடியைத் தீயிட்டுக் கொளுத்திய முன்னாள் ராணுவ வீரர்!

தூத்துக்குடியில் பாகிஸ்தான் கொடியைத் தீயிட்டுக் கொளுத்திய முன்னாள் ராணுவ வீரர்!
தூத்துக்குடியில் பாகிஸ்தான் கொடியைத் தீயிட்டுக் கொளுத்திய முன்னாள் ராணுவ வீரர்!

காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எட்டயபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலாபேரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஆகிய 2 வீரர்கள் உட்பட மொத்தம் 44 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 1980 முதல் 1997 வரை 17 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பீரங்கிப்படைப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்த கொடூரச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தீவிரவாத செயல்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும்  பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜீவானந்தம் பாகிஸ்தான் கொடியை எட்டயபுரம் பகுதியில் தெருத்  தெருவாக இழுத்துச்சென்று,  கொடி மீது செருப்பால் அடித்து, தீயிட்டு கொழுத்தி,  பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஜீவானந்தம் பேசுகையில், ``ராணுவத்தில் நாங்கள் பணிபுரிந்த காலத்தில் இதுபோன்ற கோழைத்தனமான செயல்கள் நடைபெறவில்லை. ஆனால், தற்போது துருதிஷ்டவசமாக நடந்த செயல் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், இதனால், நம் தேசம் எவ்வித பின்னடைவையும் அடையாது. தேவைப்பட்டால் முன்னாள் ராணுவ வீரர்களும் படைவீரர்களாக மாறுவோம்.

இனியும் இதே நிலை நீடித்தால், நானே எனது உடம்பில் ஆயுதங்களைக் கட்டிக்கொண்டு, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தற்கொலைப்படைத் தாக்குதலை நிறைவேற்றி உலக வரைப்படத்தில் இருந்து பாகிஸ்தான் என்ற தீவிரவாத நாடு இல்லாத இல்லாத நிலையை உருவாக்கிடத் தயாராக இருக்கிறேன்” என்றார் ஆவேசமாக