Published:Updated:

ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை

ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை
ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை

ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபரை சக கைதிகள் தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

ஜெய்ப்பூர் மத்திய சிறையில், பாகிஸ்தானின் சியோல்கோட் பகுதியைச் சேர்ந்த ஷக்ருல்லா (Shakrullah) என்பவர், சிறப்புப் பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார். அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக, இவர் கடந்த 2011ல் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது. இதையடுத்து, ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று மதியம் 1 மணியளவில், சக கைதிகள் இவரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்தவர், சிறையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய காவல் துறை ஆணையர் லக்‌ஷ்மன் கவுர், தொலைக்காட்சி பார்க்கும்போது ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக இந்த மோதல் நடந்துள்ளது என்றார்.

இந்தத் தாக்குதல் சம்பவம்குறித்து தகவல் அறிந்தவுடன், சிறைத் துறை ஐ.ஜி ரூபிந்தர் சிங், ஜெய்ப்பூர் மத்திய சிறைக்கு விரைந்தார். அங்கு விசாரணை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ஷக்ருல்லாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது என்றார்.