Published:Updated:

ஹம்மர் காரை மீண்டும் உதயநிதி ஸ்டாலினிடமே ஒப்படைத்தது சி.பி.ஐ.

ஹம்மர் காரை மீண்டும் உதயநிதி ஸ்டாலினிடமே ஒப்படைத்தது சி.பி.ஐ.
ஹம்மர் காரை மீண்டும் உதயநிதி ஸ்டாலினிடமே ஒப்படைத்தது சி.பி.ஐ.
ஹம்மர் காரை மீண்டும் உதயநிதி ஸ்டாலினிடமே ஒப்படைத்தது சி.பி.ஐ.

சென்னை: வெளிநாட்டு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்கப்பட்ட ஹம்மர் கார் உதயநிதி ஸ்டாலினிடம் மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டது.

வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்ததாக கடந்த மார்ச் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் மு.க.ஸ்டாலின், அவர் நண்பர் ராஜா சங்கர் உள்ளிட்டோர் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஸ்டாலின் வீட்டில் இருந்த ஹம்மர் ரக காரை ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வைத்திருந்தது தெரியவந்தது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் 480-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக்

##~~##
கார்களை ரூ. 500 கோடி வரி ஏய்ப்பு செய்து, இறக்குமதி செய்து பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு கொடுத்துள்ளது தெரிய வந்தது. இந்த வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோசப்பை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ஹம்மர் ரக காரை அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தார். என்ஜின், சேஸிஸ் எண்களை பதிவு செய்து கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று உதயநிதி ஸ்டாலினிடம் மீண்டும் அந்தக் காரை திருப்பிக் கொடுத்தனர்.