தேச மக்களின் உரிமைகளுக்கு எல்லாம் உச்சக்கட்ட பாதுகாவல், உச்ச நீதிமன்றம்தான். ஆனால், அதன் தலைமை நீதிபதி மீதே பாலியல் சீண்டல் புகார் எழுந்திருப்பது, நாட்டையே அதிர வைத்துள்ளது. புகார் செய்திருக்கும் பெண், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிரதமர் அலுவலகம், டெல்லி முதல்வர் அலுவலகம், ஊடகம் என்று பலதரப்புக்கும் அந்தப் பெண் புகார் மனு அனுப்பியுள்ளார்.

மேற்கண்ட புகார்களில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன்னிடம் தவறாக நடக்க ரஞ்சன் கோகோய் முயன்றதாகவும், அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால், ஒரே வாரத்தில், மூன்று இடங்களுக்குப் பணிமாற்றம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் பணியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

‘பொய்யான லஞ்சப் புகார் அளித்து என்னைக் கைதுசெய்தனர். போலீஸ் வேலையிலுள்ள என் கணவர், கணவரின் தம்பி ஆகியோரைக் காரணமின்றி சஸ்பெண்ட் செய்தனர். என் கணவரின் மற்றொரு தம்பியை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல், நீதிமன்ற உதவியாளர் பணியிலிருந்து காரணம் குறிப்பிடாமல் நீக்கியுள்ளனர்’ என்று அவரது குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

‘இது முற்றிலும் நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் எழுப்பப்பட்ட போலி குற்றச்சாட்டு’ என்று செகரட்டரி ஜெனரல் பதில் அளித்திருக்கிறார். புகார் அளித்த பெண், தன் மீதான பல குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்புவதற்காக, இந்தப் புகாரை அளித்திருப்பதாகக் கூறியுள்ளது நீதிபதி தரப்பு. ரஃபேல் விவகாரம், அயோத்தியா விவகாரம், ராகுல் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. இப்படியான சூழலில், அவர்மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளதாகக் கூறி, பார் கவுன்சில் உட்பட பல்வேறு அமைப்புகளும் ரஞ்சன் கோகோய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய அரசின் வழக்கறிஞர்கள் எனப் பலரும்கூட ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர்.

இப்படியான புகாரை விசாகா கமிட்டி மூலமாகவே விசாரித்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பெண்ணின் புகாரை, உச்ச நீதிமன்றமே தன்னிச்சையாக ரிட் மனுவாக ஏற்றுக்கொண்டது. நீதிமன்ற விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தன்மீதான புகாரில் தானே நீதிபதியாக அமர்ந்து பேசிய ரஞ்சன் கோகோய், ‘‘இந்தப் புகார் நீதித்துறையின் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. அடிப்படை இல்லாத, மிகவும் அலட்சியமான இந்தப் புகார் மிகவும் தவறானது. என் நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது. இப்படி இருந்தால் எந்த நீதிபதியும், வழக்குகளில் தீர்ப்பு வழங்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டேதான் செல்வார்கள்’’ என்று தன் கண்டனத்தைப் பதிவுசெய்தார். ஆனால், நீதித்துறையின் கண்ணியத்தை மீறி, தன் மீதான புகாரைத் தானே விசாரித்ததாக அவர்மீது புதிய சர்ச்சையும் எழுந்துள்ளது. பெண் நீதிபதிகள் இல்லாத அமர்வு இந்த வழக்கை விசாரித்தது, புகார் அளித்த பெண்ணின் சார்பாக யாரும் ஆஜராகாமல் இருந்தது என்று கடும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான அஜிதாவிடம் பேசினோம். ‘‘தனது வழக்கில் தானே நீதிபதியாக யாரும் இருக்கக் கூடாது என்பதுதான் சட்டத்தின் அடிப்படையான அம்சம். எதிர்தரப்பையும் கேட்டுக்கொண்டுதான் இதுபற்றி முடிவு எடுக்க வேண்டும். இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் ஏப்ரல் 20-ம் தேதி மூன்று பேர் கொண்ட நீதிமன்ற அமர்வில் ஒருவராக தலைமை நீதிபதி அமர்ந்ததும், அந்தப் பெண்ணைப் பற்றி தனது கருத்தை வெளியிட்டதும் தவறு. இது எல்லா அடிப்படைச் சட்ட நியாயங்களுக்கும் முரணானது. பணியிடங் களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகளைக் கையாள்வது தொடர்பான சட்டம் (தடுத்தல், பாதுகாத்தல் குறை தீர் சட்டம்) கடந்த 2013-ல் வந்துவிட்டது. இந்தச் சட்டத்தின்படி, இத்தகைய விவகாரங்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திலும் ஒரு குழு உள்ளது. அந்தக் குழுவுக்கு இந்தப் புகாரை அனுப்பினால், அவர்கள் இதுபற்றி ரகசியமாக விசாரித்து, மேல் நடவடிக்கைக்கு அனுப்பு வார்கள். அப்படிச் செய்யாமல், அவரே அமர்வில் பங்கேற்றதை ஏற்கவே முடியாது. உச்ச நீதிமன்ற நீதிபதிமீது நமக்கு மரியாதை இருக்கிறது. ஆனால், சட்டம் அவரையும்விட உயர்வானது’’ என்றார்.

பெண்களுக்கான பாதுகாப்பு, கேள்விக் குறியாகவும், பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துவரும் நிலையிலும் நீதித்துறையின் உயர் பீடம் மீதே இப்படி ஒரு புகார் எழுவது, தேசத்தின் மீதான புதிய கறையாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் பி.ஜே.பி அரசு, நீதித்துறைமீது நிகழ்த்தும் மறைமுகப் போரா அல்லது வழக்குகளால் பாதிக்கப்படவிருக்கும் வேறு அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டா அல்லது பாதிக்கப்பட்ட அப்பாவி பெண் நிகழ்த்தும் யுத்தமா என்பதையும் அதே நீதித்துறைதான் தெளிவுப் படுத்த வேண்டும்!

– ஜெனிஃபர் ம.ஆ.