Published:Updated:

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

Published:Updated:
இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

“தீவிரவாதிகள் ஈக்களைப் போன்றவர்கள். அவர்கள் வலிமையற்ற வர்கள். அவர்களால் ஒரு தேநீர்க் கோப்பையைக்கூட சேதப்படுத்த முடியாது. ஆனால், அவர்களால் ஒரு பெரிய எருதின் காதுக்குள் நுழைந்துவிட முடியும். அதைத் தன் விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிக்க முடியும். அதற்குக் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி சேதம் விளைவிக்க முடியும்.”
- யுவல் நோவா ஹராரி, ஹோமோ டியஸ்

ழக்கம்போல புனித செபஸ்டியன் தேவாலயத்துக்குச் செல்ல ஆயத்தமாகிறார் அந்த முதியவர். ஈஸ்டர் பண்டிகையையொட்டிப் பெருங்கூட்டம் அங்கு மொய்த்திருக்க, பக்கத்திலிருக்கும் வேறொரு தேவாலயத்துக்குச் செல்கிறார். இவரது ஒட்டுமொத்தக் குடும்பமும், செபஸ்டியன் தேவாலயத்தின் வெளியே அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த பிரார்த்தனைக் கூட்டத்திற்காகக் காத்திருக்கிறது இந்தக் குடும்பம். இவரது பேத்தியின் தலையை வருடியபடி தேவாலயத்துக்குள் நுழைகிறார் ஒருவர். அந்த நபர் தேவாலயத்துக்குள் சென்றதும் வெடித்துச் சிதறுகிறார். என்ன நடந்தது என யோசிக்கும் முன்பு,  இதே போன்று வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களால், நிலைகுலைந்துபோயிருக்கிறது இலங்கை.

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

கால் நூற்றாண்டைக் கடந்து நிகழ்ந்த ஈழப் போருக்குப் பின் சில ஆண்டுகளாகத்தான் அந்தத் தீவில் அமைதி துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் இப்படியான ஒரு கறுப்பு தினத்தை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஈஸ்டருக்காகக் கூடியிருந்த மக்களுக்கு, இயேசு உயிர்த்தெழுந்த நாளில் இத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம் என அப்போது தெரிந்திருக்காது. புனித அந்தோனியார் தேவாலயத்தில் முதல் குண்டு வெடிக்க, அந்த அதிர்ச்சியிலிருந்து  மீளுமுன் ஷங்கிரி- லா விடுதியில் அடுத்த தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.  தற்கொலைப்படைத் தாக்குதலிலிருந்து மீண்டு எழுவதற்குள், வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.  உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்து அடங்குவதற்குள் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல். தாக்குதலைத் தடுக்க முயன்ற மூன்று காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சமூக வலைதளங்களில் வதந்திகள் வேகமாகப் பரவ, அனைத்து சமூக வலைதளங்களையும் தற்காலிகமாகத் தடை செய்தது இலங்கை அரசு. தவறான செய்திகள், வதந்திகள் போன்ற செய்திகளை உடனுக்குடன் நீக்குவதாக அறிவித்தது இலங்கை.

கொச்சிகடே, நெகொம்போ, பட்டிகலோ தேவாலயங்களிலும் ஷங்கிரி- லா, சின்னமன் கிராண்டு, கிங்ஸ்பரி விடுதிகளிலும் டெமட்டகோடா போன்ற இடங்களிலும் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. சின்னமன் கிராண்டு உணவகத்தில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில்,  கொலையாளியின் குடும்பமும் இருந்திருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

இலங்கையின் மக்கள் தொகையில் 7% தான் கிறிஸ்துவர்கள். தேவாலயங்களின் மீது, அதுவும் அவர்களின் புனித நாளில் இப்படி நிகழ்த்துவது ஒரு கோழைத்தனமான செயல்.

செபஸ்டியன் தேவாலயத்தில் இருக்கும் இயேசு சிலை ரத்தத்தால் நனைந்த புகைப்படம், இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்கும் சாட்சியாய் நின்றுகொண்டிருக்கிறது.  செபஸ்டியன் தேவாலயமிருக்கும் கத்துவபிட்டியா முழுக்க சவப்பெட்டிகள் சின்னதும் பெரியதுமாக விரவிக் கிடக்கின்றன. புனித தினத்தின் கொண்டாட்டம் இப்படி திசைமாறுமென அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். எல்லாம் கடந்து விட்டதொரு சூழலில் நிற்கிறது இலங்கை.

மதம், இனம் தாண்டி, பாதிக்கப் பட்டோருக்கான பிரார்த்தனைகளும் ஆதரவுக்குரல்களும் உலகெங்குமிருந்தும் ஒலிக்கின்றன. பலியான கிறிஸ்துவர்களுக்கு இலங்கை நெகொம்போவில் இருக்கும் மசூதியில் தொழுகை  அனுசரிக்கப் பட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலுக்காக பாகிஸ்தானில் நினைவேந்தல் கூட்டம் நடந்துள்ளது. பிரான்ஸின் ஈபிள் டவரின் விளக்குகள் 21-ம் தேதி இரவு முழுக்க அணைத்து வைக்கப்பட்டன.

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

21-ம் தேதி மாலை ஊரடங்கு உத்தரவும். 22-ம் தேதி அன்று அவசர நிலையையும் அறிவித்தது இலங்கை. அடுத்த நாள் (22-ம் தேதி) மதியம் 87 வெடிபொருள்களை (detanators) ஒரு பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கிறது இலங்கைக் காவல்துறை.  22-ம் தேதி மாலை 5 மணியளவில் இன்னொரு குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடையில் ஒரு வெடியைச் செயலிழக்கச் செய்தபோது, அது வெடித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பே இந்தத் தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரித்தபோது, அதில் மெத்தனமாக இருந்ததா இலங்கை அரசு என்னும் சந்தேகமும் எழுகிறது. தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஃபெர்னாண்டோ பதிவு செய்த ‘என் தந்தை அங்கு நிலைமை சரியில்லை என்றார். ஆதலால், நான் 21-ம் தேதி காலை தேவாலயத்துக்குச் செல்லவில்லை’ என்ற ட்வீட் இன்னும் அபாயகரமான ஒன்று. அமைச்சர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பதை சிங்கள மக்கள் உட்பட யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இலங்கை: தொடர வேண்டாம் துயரம்!

நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த அன்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர், “தீவிரவாதிகளின் பெயர்களை வெளியிட வேண்டாம். தீவிரவாத அமைப்புகள் இதைப் பயன்படுத்தி மக்களுக்குள் பிரிவினைவாதத்தை விதைக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்களைத் தியாகிகள் ஆக்கிவிடாதீர்கள்’’ என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். இந்தப் பெருஞ்சோகம் நிகழ்ந்து ஒரு நாளாகியும், எந்தவொரு நபரின் பெயரையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை இலங்கை அரசு. மார்ச் மாதம் நியூசிலாந்தில் இருக்கும் கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. 50 பேர் கொல்லப்பட்டார்கள். நியூசிலாந்தைச் சேர்ந்த அந்த நபர், துப்பாக்கிச் சூடு நடத்தும்முன்னர் அதை ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவாக வெளியிட்டார். நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிண்டா ஆர்டர்ன் அந்த நபரின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.

தீவிரவாதம் என்னும் ஈக்களின் அதிகபட்ச ஆசையெல்லாம் மதம், மொழி போன்ற எருதுகளுக்குள் நுழைந்து நாடுகளைச் சிதைப்பது தான். பயத்தை மனிதனுக்குள் ஊடுருவச் செய்வதில் இருக்கிறது அவர்களுக்கான வெற்றி. இதைச் செய்தது இந்தத் தீவிரவாத அமைப்பு தான் என உலகெங்கும் செய்தி பரவும்போது, அவற்றின் மீதான பயம் அதிகரிக்கிறது. மனிதர்களைக் கொல்லக்கூடிய ஆகச்சிறந்த உயிர்க்கொல்லி பயம். தீவிரவாதத்தின்  ஆகப்பெரும் தோல்வி என்பது அவர்களுக்கான முக்கியத்துவத்தைத் தராமல் இருப்பதுதான்.

-கார்த்தி