Published:Updated:

சிறுமி பாலியல் பலாத்காரம்; இருவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்; இருவர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம்; இருவர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம்; இருவர் கைது

பரமக்குடி: பரமக்குடியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மஞ்சள்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ்கண்ணா(16), விஜி(18). இவர்கள் இருவரும் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டிட வேலைபார்த்து வந்தனர்.

நேற்று அந்த வீட்டில் இருந்த 7 வயது சிறுமியை நைசாக பேசி இருவரும் அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பயந்து போய் அழுதுள்ளால். சிறுமியின் அழுகுரலை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த வீட்டிற்குள் சென்று சிறுமியை மீட்டதுடன், இருவருக்கும் தர்ம அடி கொடுத்து பரமகுடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

##~~##
இதையடுத்து ராஜேஷ்கண்ணா மற்றும் விஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இரா.மோகன்