Published:Updated:

மது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்

மது அருந்த பணம் தரவில்லை -  தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்
மது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்

சிவகாசி அருகே மது அருந்த பணம் தராத தாயை கொலை செய்துவிட்டு தாயின் சடலத்துடன் தூங்கிய மனநலம் பாதித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலப்பாண்டி. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், பிரபா என்ற 7 வயது மகனும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான அருணாச்சலப்பாண்டி கடந்த 6 ஆண்டுகளாக தன் மனைவி மற்றும் மகனை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். அருணாச்சலப்பாண்டி வேலைக்குச் செல்லாமல் மது அருந்தியும், ஊர் சுற்றியும் வந்துள்ளார். மேலும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தன் தாய் ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்த பணம் கேட்டு தன் அம்மா ஈஸ்வரியுடன் (60) தகராறு செய்துள்ளார். ஆனால், ஈஸ்வரி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருணாச்சலப்பாண்டி தன் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தானும் தாயின் சடலத்துடனேயே வீட்டுக்குள் தூங்கியுள்ளார். பின்னர் அருணாச்சலப்பாண்டியின் அப்பா சின்னகணபதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு ஈஸ்வரி கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து சின்னகணபதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருத்தங்கல் காவல்துறையினர் அருணாச்சலப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.