Published:Updated:

இந்திய விமானப்படை தாக்குதல் எதிரொலி!- அவசர ஆலோசனையில் பாகிஸ்தான்

இந்திய விமானப்படை தாக்குதல் எதிரொலி!- அவசர ஆலோசனையில் பாகிஸ்தான்
இந்திய விமானப்படை தாக்குதல் எதிரொலி!- அவசர ஆலோசனையில் பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் வகை போர் விமானங்கள் இந்திய நேரப்படி காலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது. 12 விமானங்கள் இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை விமானங்கள் அத்துமீறியதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதிப்படுத்தியது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  


அதேபோல் பாகிஸ்தானிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இஸ்லாமாபாத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் நடந்தவுள்ளதாகும் இந்த அவசரக் கூட்டத்தில் முன்னாள் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.