Published:Updated:

``ஷேம்... ஷேம்..!” -இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொதித்த எதிர்க்கட்சிகள்

``ஷேம்... ஷேம்..!” -இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொதித்த எதிர்க்கட்சிகள்
``ஷேம்... ஷேம்..!” -இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொதித்த எதிர்க்கட்சிகள்

தீவிரவாத முகாம்கள்மீது இந்திய விமானப்படை நேற்று நடத்திய அதிரடித் தாக்குதல், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசுக்கு  பெரும் நெருக்கடியைக் கிளப்பியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் பயணம்செய்த வாகனம்மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, நேற்று இந்திய விமானப்படை பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்தப் பதிலடி தாக்குதலில் புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டதாக இந்தியா அறிவித்தது. 

இந்தியாவின் இந்தப் பதிலடி தாக்குதலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசியலில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் அரசின் சார்பில், இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததே தவிர, தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. பாகிஸ்தானின் விமானங்கள் இந்திய விமானங்களை இடைமறித்து விரட்டி விட்டனர்” என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 


 

ஆனால் எதிர்க்கட்சிகள், அரசின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டன. மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை குறிப்பிட்டு ஷேம்... ஷேம்... எனக் கூச்சலிட்டுள்ளனர். இதனால், நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசுக்கு இந்தியாவின் பதிலடித் தாக்குதல் பெரும் நெருக்கடியை அளித்துள்ளது. 

 மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தானின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா அசிஃப், ``இந்தியாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படவேண்டியது அவசியம். காஷ்மீர் விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என இந்தியாவுக்குத் தெளிவுபடுத்தவேண்டியது மிக அவசியம்” என்றார்.