Published:Updated:

காரைக்கால் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

காரைக்கால் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
காரைக்கால் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
காரைக்கால் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். 24.12.2016 அன்று மாலை 3 மணியளவில் பள்ளி வளாகத்தில் சக தோழியர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரும்பகரம், பொன்னகர் காலனியைச் சேர்ந்த ஜெ.சி.பி டிரைவரான ராஜாஜி மகன் ராஜ்குமார் (வயது 23) சிறுமியைக் கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரிடமிருந்து கடுமையாகப் போராடி, அங்கிருந்து தப்பி ஓடி வீட்டுக்கு வந்து, நடந்த விபரங்களை சிறுமி தன் தாயாரிடம் கூறினார். இது குறித்து சிறுமியின் தாய் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நெடுங்காடு மற்றும் மகளிர் காவல் நிலைய போலீஸார், சைல்டுலைன் அமைப்பினருடன் சேர்ந்து, சிறுமியின் வீட்டுக்குச் சென்று சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர். மேலும், சம்பவத்தின்போது சிறுமி அணிந்திருந்த ஆடைகள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் `போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் மீது காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று  மாலை தீர்ப்பு கூறப்பட்டது. ராஜ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகவும், அவரைக் குற்றவாளி என்றும் அறிவித்த நீதிபதி சிவகடாட்சம், ராஜ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்.