கடலூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், பழகியப் பெண்ணைக் கொலைசெய்த சம்பவம், சாதி சண்டையாக உருவெடுத்து, கட்சித் தகராறாகவும் மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ம.க கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்மீது குற்றம்சாட்டியிருப்பதால், பதற்றம் மேலும் கூடியிருக்கிறது.

மே மாதம் 8-ம் தேதி விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி திலகவதி, கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ஆகாஷ் என்ற இளைஞரைப் போலீஸார் கைதுசெய்தனர். திலகவதியும் ஆகாஷும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். கொலைசெய்யப்பட்ட திலகவதிக்கு நியாயம் கேட்டு பா.ம.க-வினர் களத்தில் இறங்கியதாலும், ‘குற்றம் சாட்டப்படும் ஆகாஷ் வி.சி.க-வைச் சேர்ந்தவர் அல்ல’ என்று திருமாவளவன் மறுத்திருப்பதாலும் விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் அறிக்கையில், ‘காதலிக்க மறுத்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதியை தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாடகக்காதல் மற்றும் ஒரு தலைக்காதல் செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட கும்பலைச் சேர்ந்த ஆகாஷ், தன்னைக் காதலிக்க மறுத்த திலகவதியை வெறித்தனமாகக் கொலைசெய்துள்ளார்’ என்று சொல்லியிருக்கிறார்.

மே 10-ம் தேதி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து திலகவதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, திலகவதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சாலை மறியல், காவல் நிலையம் முற்றுகை ஆகிய நிகழ்வுகளால் போராட்டக்களமாக மாறியது, கருவேப்பிலங்குறிச்சி. திலகவதியின் உறவினர்கள் மற்றும் பா.ம.க-வினர், திலகவதியின் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தச் சமயத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இந்தச் சம்பவத்தைத் திசைதிருப்புகிறார். குற்றவாளிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில், ஆகாஷின் தந்தை அன்பழகன், ‘என் மகன் ஆகாஷ், திலகவதியைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்தார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். மே 8-ம் தேதி திலகவதியை யாரோ கொலை செய்துவிட்டனர். அன்று என் மகன் திலகவதியிடம் செல்போனில் பேசியதை மட்டுமே அடிப்படையாக வைத்து, அவரைக் கைது செய்துள்ளனர். என் மகன் ஆகாஷ் அப்பாவி. அந்தப் பெண்ணின் உறவினர்களோ, கல்லூரி நண்பர்களோ அவரை ஆணவக்கொலை செய்திருக்கலாம்’ என்று கடலூர் மாவட்ட எஸ்.பி-யிடம் மனு கொடுத்துள்ளார்.

திலகவதியின் தந்தை சுந்தரமூர்த்தியோ, ‘என் மகள் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த ஆகாஷ் அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார். என் மகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். ஆகாஷுக்கு மரண தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட எஸ்.பி. சரவணன் ஆகியோர் தலைமையில் திலகவதியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், அப்பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப் பட்டது. அதன்பிறகு, மருத்துவ மனையிலிருந்து திலகவதியின் உடலைப் பெற்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் பேசினோம். “ஆகாஷ், திலகவதி இருவரும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள். அப்போதிருந்தே நட்பாகப் பழகி வந்துள்ளனர். பின்னர் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்க ஆரம்பித்தனர். ஆகாஷ் மாணவர்களை ராக்கிங் செய்த புகாரில் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். ஒரு தடவை திலகவதி படிக்கும் கல்லூரிக்கே சென்று தகராறு செய்துள்ளார். இதனால் அப்பெண், ஆகாஷின் செல் நம்பரை பிளாக் லிஸ்ட்டில் போட்டுள்ளார். இதையடுத்து வேறு நம்பரில் இருந்து திலகவதியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சம்பவத்தன்று, அப்பெண் வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட ஆகாஷ், அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஆகாஷைத் தாக்கியுள்ளார் அந்தப் பெண். இதில் ஆத்திரமடைந்த ஆகாஷ், அப்பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலைசெய்து தப்பித்துவிட்டார். நாங்கள், திலகவதியின் செல்போன் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மூலம் ஆகாஷ் பற்றித் தெரிந்து அவரைக் கைது செய்தோம். கொலை செய்ததை ஆகாஷ் ஒப்புக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்” என்றனர்.

காதல் கொலை சம்பவம் அரசியல்ரீதியாகத் திசை திரும்பியிருப்பதால், பதற்றமான சூழ்நிலையில் இருக்கிறது கடலூர் மாவட்டம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் அமைதிக் கூட்டம் நடத்தி பதற்றத்தைத் தணிக்க வேண்டியது அவசியம்!

- ஜி.சதாசிவம்
படம்: எஸ்.தேவராஜன்