Published:Updated:

தற்கொலைக்குத் தூண்டிவிடாதீர்கள்!

தொடர்கிறது கடலூர் கவலை

தற்கொலைக்குத் தூண்டிவிடாதீர்கள்!

தொடர்கிறது கடலூர் கவலை

Published:Updated:
##~##

கொத்திப்போடப்பட்ட கடலூர் இன்னமும் அப்படியே கிடக் கிறது. மீண்டும், எதில் இருந்து தங்களது வாழ்க்கையையும் விவசாயத்தையும் தொடங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் மக்கள். 

இதுகுறித்துப் பேசும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளரான நிஜாமுதீன், ''மற்ற பகுதிகளைவிட கடலூரில் விவசாய உற்பத்தி வித்தியாசமானது. நெல், கரும்பு, வாழை போன்றவற்றை அடுத்த ஆறு மாதங்களில் உற்பத்தி செய்து விடலாம். ஆனால் முந்திரி, பலா போன்றவற்றை மறுஉற்பத்தி செய்யவே பல ஆண்டுகள் ஆகும். இதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது மூதாதையர்கள் உருவாக்கியது.  இரண்டு தலைமுறைகளாக எங்கள் வாழ்வாதாரமே இதுதான். 'பானையிலே பணத்தை வச்சிருக்கேன்’ என்பது இங்கே இருக்கும் விவசாயிகள் சர்வ சாதாரணமாகச் சொல்லும் வார்த்தை. ஆனால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு இப்படிச் சொல்லவே முடியாது. வாழ்க்கையே நரக மாகத்தான் இருக்கப்போகிறது. ஏனென்றால், இவர்களுக்கு வருமானம் இருக்கப்போவது இல்லை. கிட்டத்தட்ட 3.5 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சராசரியாகச் சொன்னால், இவர்கள் ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயாவது சம்பாதிப்பார்கள். பலரும் சராசரியாக 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்பை இழந்து விட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்கொலைக்குத் தூண்டிவிடாதீர்கள்!

    அதிக விவசாயக் கிராமங்களை உள்ளடக்கிய பண்ருட்டியில் மட்டும் முந்திரி வர்த்தகம் 200 கோடி

தற்கொலைக்குத் தூண்டிவிடாதீர்கள்!

ரூபாய்க்கு நடக்கிறது என்று அரசாங்கமே அறிவித்து உள்ளது. இதுதவிர, அந்நியச் செலாவணியால் அரசுக்கு வரும் வருமானம் தனி. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக ஐந்து பலா மரங்கள் இருக்கின்றன. அதாவது, ஐந்து மரங்கள் சேர்ந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்றுகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அடுத்தபடியாக அதிகமாகத் தென்னை மரங்கள் இருந்தது கடலூர் மாவட்டத்தில்தான். கலப்பின வகைகள் இல்லாமல் 10 முதல் 15 வருஷங்களுக்கு முன்னால் நடப்பட்ட மரங்கள் இங்கே நிறையவே இருந்தன. இந்தப் புயலில் அவை எல்லாமே சாய்ந்து விட்டன. 3.5 லட்சம் ஏக்கர் தென்னைகள் இப்போது இல்லை. 1 லட்சம் ஏக்கர் முந்திரி அழிந்து விட்டது. இவற்றை மீண்டும் எப்போது, எப்படி உருவாக்கப்போகிறோம்?

கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் ஏரிப் பாசனத்துக்கு பெயர் பெற்றவை. இங்கு கிட்டத் தட்ட 3.5 லட்சம் ஏக்கர் தோட்டப் பயிர்கள் நாசமாகியிருக்கிறது. 460 மீனவர்களின் படகுகள் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டன. 'சிட்கோ’ தொழிற்கூடங்கள் மட்டுமே 13,000 எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு உள்ளன. கடலூரில் இருக்கும் சிப்காட்டில் இயந்திர சேதங்கள் 100 கோடி ரூபாய் வரை இருக்கலாம். பொது வாக முந்திரி, பலா போன்றவை தண்ணீர் இல்லாத இடங்களில் வளரும் என்றாலும், அதுவே, செடியாக இருக்கும்போது தண்ணீர் அவசியம். அதனால் பண்ருட்டி, காடாம்புலியூர், ராமாபுரம் பகுதியில் முற்றிலும் அழிந்துவிட்ட மரங்களைப் புதிதாக நட்டு 15 ஏக்கருக்கு ஓர் இடத்தில் இலவச மோட்டார் பம்ப் போட்டுக் கொடுத்தால்தான் இந்த மரங்களை மீண்டும் உருவாக்க முடியும். அப்போதுதான் இழந்த விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு மீட்டுத் தர முடியும்.

தற்கொலைக்குத் தூண்டிவிடாதீர்கள்!

பொதுவாக, அரசு அதிகாரிகள் தலைமையில் வி.ஏ.ஓ. மற்றும் தலையாரிகள் மூலமாகத்தான் நிவாரணத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், இங்கே அப்படி நிவாரணத் தொகை கொடுக்கப்படவில்லை. வார்டு உறுப்பினர், கட்சிக் கரை வேட்டிகள்தான் நிவாரணத் தொகையைக் கொடுக்கிறார்கள். வாங்கும் கூட்டமும் கரை வேட்டியோடு நிற்கிறது. தொகை நிரப்பப்படாத படிவங்களில் கையெழுத்து வாங்குகிறார்கள். 2,500 முதல் 5,000 ரூபாய் வரை தொகை பிரித்துத் தரப்படுகிறது. என்ன சேதம் நடந்துள்ளது என்பதை முழுமையாக வெளியிடாமல் தமிழக அரசே மூடி மறைப்பதாகத்தான் நினைக்கிறேன். சேதத்தை முழுமையாகக் கணித்து நஷ்டஈடு கொடுக்க முடியாமல் போனால், மகாராஷ்டிராவில் விதர்பா விவசாயிகள் போல பல முந்திரி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழல் உருவாகி விடும்'' என்று அதிரவைத்தார்.

அரசு என்னதான் செய்கிறது? கடலூர் சப் கலெக்டராக இருக்கும் கிரண் குர்ரலாவிடம் கேட்ட போது, ''கடலூர் தாலுக்காவில் மூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 100 கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது. கால்நடைகள் இழப்பீட்டுத் தொகையாக 5.4 லட்ச ரூபாய் அன்றே உடனடியாக வழங்கப்பட்டது. புயலில் பலியான 27 பேர் குடும்பங்களுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் மறுநாளே வழங்கப்பட்டது. தினமும் இரவு 2 மணி வரை அலுவலகத்திலேயே இருந்து பணியாற்றி வருகிறோம். முழுவீச்சில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மாவட்ட நிர்வாகத்தைக் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை..'' என்றார் ஆதங்கத்துடன்.

கடலூரைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் அனைவரின் பிரார்த்தனையும்!

- ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism