Published:Updated:

பென்னி குக் பொங்கல்!

பொங்கலோ பொங்கல்..

பென்னி குக் பொங்கல்!

பொங்கலோ பொங்கல்..

Published:Updated:
##~##

'பசித்தவனுக்கு மீன் துண்டு களைத் தராதே... மீன் பிடிக்கக் கற்றுக்கொடு’ என்ற உயரிய உலகப் பழமொழியை எங்களுக்குப் புரிய வைத்தவர். உழைத்து வாழ எங்களுக்கு வழி காட்டியவர். தண்ணீர் தந்த தனிமனிதக் கடவுள். எங்கள் முன்னோர்களோடு ஒன்றாக உழைத்தவர், ஓய்வெடுத்தவர், பசியோடு... உணவையும் பங்கிட்டு உண்டவர். அணை கட்டுவதற்குப் பணம் இன்றித் தூக்கத்தைத் தொலைத்தவர். தன்னுடைய சந்ததிக்காக சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை விற்று தமிழனின் தாகம் தீர்க்க அணை கட்டியவர்’ - என்று பென்னி குக் புகழ் பாடுகிறார்கள், முல்லைப் பெரியாறு பகுதி வாழ் தமிழர்கள். 

ஜனவரி 15 அன்றுதான் பென்னி குக் பிறந்த தினம். அன்றுதான் பொங்கல் திருநாளும் என்பதால், அன்றைய தினத்தை 'பென்னி குக் பொங்கல் விழா’வாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென்னி குக் பொங்கல்!

''சூரிய பகவானுக்குக் கொடுக்கும் மரியாதையைத் தான் பென்னி குக்  படத்துக்கும் செய்கிறோம். மஞ்சள், கரும்பு, பூசணி, எலுமிச்சை, காய்கனிகள் என்று முல்லைப் பெரியாறு தண்ணீரில் விளைந்த அத்தனை பொருட்களுடன் ஒரு பிடி நெல்லு நாற்றையும் சேர்த்துவைத்து பூஜை செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பென்னி குக்... எங்கள் குலதெய்வம்'' என்று நன்றிப்பெருக்குடன் சொல்கிறார்கள் பாலார்பட்டி மக்கள்.

பென்னி குக் 171-வது பிறந்த நாள் என்பதால், 171 பொங்கல் பானைகள். கம்பம் சுருளிப்பட்டியில் முல்லையாறு செல்லும் பாலத்தில், 'பென்னி குக்’ படம் வைத்துப் பொங்கல் இட்டார்கள். 'பொங்கலோ பொங்கல்... பென்னி குக் பொங்கல்’ என்று ஆனந்த கோஷமிட்டு முதல் கவள உணவை பென்னி குக் படத்துக்குப் படைத்துவிட்டு... ஆற்றிலும் பொங்கல் விட்டார்கள்.

பென்னி குக் பொங்கல்!

தேவாரம் பகுதியில் பென்னி குக் படத்தை ஒரு ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். 'பென்னி குக் 999’ என்று பெயரிட்டு 999 பொங்கல் வைத்தார்கள். ஊர் மக்கள் பானையோடு மட்டும் வந்தால் போதும். பொங்கல் வைக்கத் தேவையான அரிசி, வெல்லம், நெய், கரும்பு போன்ற அனைத்துப் பொருட்களும் இலவசம். ஊர்கூடித் தேர் இழுப்பது போன்று... நிஜமாகவே 'பென்னி குக் ரதம்’ இழுத்துக் கொண்டாடினார்கள். பென்னி குக் பெயரில் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளும் ஆங்காங்கே நடைபெற்றன.  

பென்னி குக் பொங்கல்!

தேனி மாவட்டத்தின் எல்லையான கெங்குவார் பட்டியில் இருந்து கேரள எல்லையான குமுளி வரை வழி நெடுக, பென்னி குக் படங்களுக்கு மாலை, மரியாதை என்று அமர்க்களப்பட்டது. சின்னமனூரில் உள்ளே கிழக்குப் பகுதியில் இருக்கும் சிறிய கிராம மான ஊத்துப்பட்டியில் பொதுப்பொங்கல் வைத்து 'பென்னி குக்’ படத்துக்கு 'பாலாபிஷேகம்’ செய்தார்கள். உத்தமபாளையும், ஆர்.சி. சர்ச்சில் பென்னிகுக்குக்கு சிறப்பு ஆராதனைக் கூட்டம் நடத்தி 100 பானைகளில் பொங்கல் வைத்தார்கள்.

இனிவரும் காலங்களிலும் தைப்பொங்கல் கொண்டாட்டங்களில் பென்னி குக் எப்போதும் இடம் பிடிப்பார்!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வி.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism