Published:Updated:

போலீஸுக்கு எதிரி போலீஸ்?

இழுபறியாகும் பதவி உயர்வு

போலீஸுக்கு எதிரி போலீஸ்?

இழுபறியாகும் பதவி உயர்வு

Published:Updated:
##~##

விஜயகாந்த் பாணியில் சொல்வது என்றால், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7,21,38,958. தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஒட்டுமொத்த போலீஸ்காரர்களின் எண்ணிக்கை 1,09,817. 

ஏழு கோடி மக்களுக்கு ஒரு லட்சம் போலீஸார்தான் இருக்கிறார்கள். கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள்,  உயர் அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸுக்கு எதிரி போலீஸ்?

நியமிக்கப்பட்டுள்ள போலீஸாரின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டால், பாதிப்பேர்தான் மக்கள் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள். இதில், நீதிமன்றப் பணிகள், எழுத்துப் பணிகளிலும் பலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பதவி உயர்வில் அந்தப் பதவிக்கு வரத் தகுதியான பலர் இருந்தும்... இன்னமும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த ஜூன் மாதமே பதவி உயர்வுக்கான கமிட்டிக் கூட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால், புத்தாண்டு தொடங்கியும், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் கூடுதல் டி.ஜி.பி-க்கள் நிர்வாகம், தலைமையகம் மற்றும் உளவுப் பிரிவு அடங்கிய கமிட்டிதான், கூட்டம் நடத்திப் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஏன் இந்தத் தாமதம் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய கூடுதல் டி.ஜி.பி. ஒருவர், ''இந்த கமிட்டியின் தலைவரான சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ரொம்ப பிஸி. அதனால்தான் இந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. அவர் நேரம் ஒதுக்கினால், இந்தப் பிரச்னை உடனே முடிந்துவிடும்'' என்றார்.

பதவி உயர்வுக்காகக் காத்திருப்பவர்களோ, ''இதை எல்லாம் ஒரு காரணமாகச் சொல்லி எங்களுக்கு உரிய காலத்தில் வர வேண்டிய பதவியைத் தர மறுக்கிறார்கள். அதனால், எங்களுக்குத்தான் நஷ்டம். ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை இழப்பதுடன், சீனியாரிட்டியும் பாதிக்கப்படும். பதவி உயர்வு பெற வேண்டிய காலம் ஆன பிறகும் கிடைக்காமல் ஓய்வு பெறுபவர்களின் நிலை இன்னும் கொடுமையானது. ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மட்டும் எல்லாமே உரிய காலத்தில் கிடைத்துவிடுகிறது. எங்களுக்கு, எங்கள் அதிகாரிகளே எதிரிகளாக இருக்கிறார்கள்'' என்று டென்ஷன் ஆகிறார்கள். காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் அரசு, இனியாவது காவலர்களின் குறை தீர்க்கட்டும்!

- எஸ்.கோபாலகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism