Published:Updated:

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை

இந்தியன் வங்கி  முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
இந்தியன் வங்கி  முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை

சென்னை: இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை சி.பி.ஐ. கோர்ட்டில்  வழங்கப்பட்டது.

இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் எம்.கோபாலகிருஷ்ணன். இவரது பதவிக்காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 19 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. இந்த வழக்கில் கைதான கோபாலகிருஷ்ணன், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

இதேபோல், கடந்த 1998ஆம் ஆண்டு கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு ரூ.1.75 கோடி கடன் வழங்கியதில் மோசடி செய்தததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் மண்டல மேலாளர் சண்முகசுந்தரம், கட்டுமான நிறுவனத்தின் தனசிங், ஆனந்த் பிள்ளை ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. கோர்ட் முதன்மை செஷன்ஸ் நீதிபதி, எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

சண்முகசுந்தரத்திற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும், தனசிங்குக்கு 2 வருட சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனந்தபிள்ளை மரணமடைந்து விட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.