Published:Updated:

`4 நாள்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தக்கூடும்!'- ஜெய்ஷ் இ முகமது ப்ளானை சொல்லும் என்.ஐ.ஏ

`4 நாள்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தக்கூடும்!'- ஜெய்ஷ் இ முகமது ப்ளானை சொல்லும் என்.ஐ.ஏ
`4 நாள்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தக்கூடும்!'- ஜெய்ஷ் இ முகமது ப்ளானை சொல்லும் என்.ஐ.ஏ

பால்கோட் தாக்குதலுக்குப் பதிலடியாக ஜெய்ஷ் - இ - முகமது இன்னொரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசியப் புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் 14-ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மரணமடைந்தனர். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக,  கடந்த 26-ம் தேதி காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பிறகு, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதுபோன்ற  சம்பவங்களால் இந்திய எல்லைப் பகுதியிலும் காஷ்மீரிலும் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நேரத்தில், அசம்பாவிதங்களைத் தடுக்க காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படை நடத்திய பால்கோட் தாக்குதலுக்கு பதிலடியாக ஜெய்ஷ் - இ - முகமது இன்னொரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ``பால்கோட் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெய்ஷ் - இ - முகமது மீண்டும் ஒரு தாக்குதலுக்கு ப்ளான் போட்டுள்ளது. இந்தத் தாக்குதலும் புல்வாமா தாக்குதலைப் போல மிகப்பெரியதாக இருக்கலாம். 

அதுவும் தெற்கு காஷ்மீரின் முக்கிய இடங்களான காசிகுண்ட், அனந்த்நாக் போன்ற இடங்களில் இன்னும் 3 அல்லது நான்கு நாள்களில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு தாக்குதல் நடத்தலாம்" எனக் கூறப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே நேற்று ஜம்மு பஸ் ஸ்டாண்டில் வெடிகுண்டு வெடித்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். எனினும் என்.ஐ.ஏ. எச்சரிக்கையைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.