முதலீட்டுக்கு அதிக வட்டி, மல்டி லெவல் மார்க்கெட்டிங், பச்சைக்கல், ஈமு கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, கொப்பரை விற்பனை, சந்தன மர வளர்ப்பு, அகர் மர வளர்ப்பு... என்று ஈரோடு மாவட்டத்தைக் குறிவைத்துப் பல மோசடிகள் அரங்கேறியுள்ளன. லேட்டஸ்டாக அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது, சிறுநீரக தான மோசடி! ஈரோட்டில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையின் பெயரைப் பயன்படுத்தி… ‘கிட்னி தானம் செய்தால், மூன்று கோடி ரூபாய் தரப்படும்’ என்று விளம்பரம்செய்து, பதிவுக் கட்டணமாக லட்சக்கணக்கான ரூபாயைச் சுருட்டியிருக்கிறது ஒரு கும்பல்.

ஈரோடு சம்பத் நகர்ப் பகுதியில் இருக்கிறது ‘கல்யாணி கிட்னி கேர் சென்டர்’. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் ‘டாக்டர் அருண் விஜயனிடம் பேச வேண்டும்’ என்றும் ‘கிட்னி தானம் செய்ய விரும்புகிறேன்’ என்றும் இந்த மருத்துவமனைக்குத் தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. ஹைதராபாத்திலிருந்து அருண் விஜயனிடம் பேசிய ஷரவந்தி என்பவர், “கிட்னி டொனேட் செய்வதற்குப் பதிவுக் கட்டணமாக உங்கள் அக்கவுன்ட்டில் பணம் போட்டிருக்கிறேன். உங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. குழந்தையின் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. என் கிட்னியை எடுத்துக்கொண்டு உடனடியாகப் பணத்தைக் கொடுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்துபோனார் அருண் விஜயன். அதன் பிறகுதான், இந்த மோசடி அம்பலமாகியிருக்கிறது.

‘கல்யாணி கிட்னி கேர் சென்டர்’ பெயரில் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி, ‘அரசு அனுமதியுடன் சிறுநீரக தானம் பெறுகிறோம். ஒரு சிறுநீரகத்துக்கு மூன்று கோடி ரூபாய் தரப்படும். 7,500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டால், முதற்கட்ட பரிசோதனை செய்து 1.5 கோடி ரூபாய் கொடுப்போம். ஆபரேஷனுக்குப் பிறகு மீதிப்பணம் தரப்படும்’ என்று டாக்டர் அருண் விஜயன் பெயரில், ஒரு செல்போன் எண்ணைப் போட்டு விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.

பணத்துக்காகக் கிட்னியை விற்க விரும்பிய பலர், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பதிவுக்கட்டணத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த செல்போன் எண்ணில் சரியான பதில் கிடைக்காத காரணத்தால், கல்யாணி கிட்னி கேர் சென்டரின் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டிருக் கிறார்கள். அப்போதுதான் அந்த விளம்பரம் போலியானது, யாரோ திட்டமிட்டு மோசடி செய்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவந்திருக் கிறது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரபாகர், இவ்விஷயம் குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் சக்தி கணேசனிடம் புகார் அளித்திருக்கிறார்.

பிரபாகரிடம் பேசினோம். “திடீரென்று எங்கள் மருத்துவமனைக்கு, ‘சிறுநீரக தானம் செய்ய விரும்புகிறோம்’ என்று போன் அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. அப்படிப் பேசியவர்களில் ஒருவர்தான் ஷரவந்தி. அவர், சில வாட்ஸ்அப் ஆதாரங்களைக் கொடுத்தப் பிறகுதான் எங்கள் மருத்துவமனையின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. எங்கள் வெப்சைட்டில் உள்ள தகவல்களையும் எங்கள் மருத்துவர்களின் பெயர்களையும் பயன்படுத்தி அப்பாவி மக்களிடம் பணத்தைக் கறந்திருக்கின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் எங்களுக்குக் கிட்டத்தட்ட 300 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இன்னமும் வந்துகொண்டிருக்கின்றன. மோசடியில் ஈடுபட்டவர்கள் மிசோராம் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியின் கணக்கு எண்ணைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த விஷயம் எங்களுக்குத் தெரிந்த அடுத்த நாளே (கடந்த மார்ச் 2-ம் தேதி) எஸ்.பி-யிடம் புகார் செய்தேன். அவர்தான் ‘மீடியாவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டாம். மீடியாவில் வெளிவந்தால், குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்’ என்றார். அதனால் நாங்கள் யாரிடமும் சொல்லவில்லை. உடனடியாக அந்த ஃபேஸ்புக் பக்கத்தை மட்டும் காவல்துறையினர் பிளாக் செய்துவிட்டனர்” என்றார்.

அந்த மோசடிக் கும்பலின் செல்போன் எண்ணுக்கு, ‘கிட்னி தானம் செய்ய விரும்புகிறோம்’ என வாட்ஸ் அப் மூலமாக நாமும் தகவல் அனுப்பினோம். அடுத்த நொடியே, ‘கிட்னி கொடுத்தால், மூன்று கோடி ரூபாய் பணம் கொடுப்பதாக’ நமக்குப் பதில் வந்தது. எனவே, மோசடிக் கும்பலின் செல்போன் எண் இன்னமும் இயங்கு நிலையில்தான் இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவதன் காரணம்தான் புரியவில்லை.

எஸ்.பி சக்திகணேசனிடம் பேசினோம். “இந்தப் புகார் தொடர்பாக விசாரித்துவருகிறோம். மோசடி நபர்கள் அஸ்ஸாம் பகுதியில் இருப்பதாகத் தெரிகிறது. சைபர் க்ரைம் போலீஸார் மோசடி நபர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வருகின்றனர். அவர்களின் இருப்பிடம் தெரிய வந்ததும் கைதுசெய்வோம்” என்றார்.

புகார் கொடுத்துக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆனபிறகே காவல்துறை, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவும் இல்லை. உயிர்காக்கும் விஷயத்தில், மோசடி செய்துவரும் இந்தக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்து உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டியது காவல்துறையின் கடமை!

- நவீன் இளங்கோவன்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி