Published:Updated:

பொள்ளாச்சி ஆபாச வீடியோ விவகாரத்தில் 4 பேருக்கு குண்டாஸ்! - திருநாவுக்கரசின் ஜாமீன் மனு தள்ளுபடி #ArrestPollachiRapists

கடந்த சில நாள்களாகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த பொள்ளாச்சி ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய நான்குபேர்,  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

ஃபேஸ்புக் மூலம் ஒரு கல்லூரிப் பெண்களிடம் நட்பாகி, 'அவுட்டிங்' என்ற பெயரில் வெளியில் அழைத்துச்சென்று பலவந்தமாக ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்த  கும்பல் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டது.  கடந்த 24-ம் தேதி, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில்  சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கும்பல், ஏராளமான பெண்களை ஏமாற்றி அழைத்துச்சென்று ஆபாசப் படம் எடுத்துள்ளதாகவும், இவர்களது பின்னணியில் அ.தி.மு.க புள்ளிகளின் வாரிசுகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இதுதொடர்பாக குரல்கொடுத்துவரும் சூழலில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது மகன் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவரது தயார் செல்வி, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளது.