Published:Updated:

330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி!

330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி!
News
330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி!

330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி!

Published:Updated:

330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி!

330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி!

330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி!
News
330 நாள்கள் சிறைவாசம்... ஜாமீனில் வருகிறார் நிர்மலா தேவி!

மாணவிகளை தவறான வழியில் நடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 330 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வருகிறார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றமும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் ஜாமீன் மறுத்த நிலையில், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். அவர்களின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இரண்டு பேருக்கும் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனிடையே, ஜாமீன் வழங்கக்கோரி நிர்மலா தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ``11 மாதங்களுக்கு மேல் சிறையில் நான் இருக்கிறேன். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நான் சாட்சிகளை கலைக்க மாட்டேன். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படுவேன். இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்றும் சாட்சிகளை கலைக்கும் விதமாக செயல்படக்கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்தார்.

இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ``பேராசிரியர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்புகள் இருந்த நிலையில் நீதிபதி வழக்கு குறித்து ஆராய்ந்து ஜாமீன் வழங்கியுள்ளார்.
நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர், பல்வேறு இடையூறுகளைத் தாண்டி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்க கூடாது, பொதுமக்களையோ வேறு சில நபர்களையோ சந்தித்து தகவல் அளிக்கக்கூடாது, சாட்சியங்களைக் கலைப்பதுபோல் நடந்துகொள்ளக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை ஜாமீனில் குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார். அதற்கான சட்டரீதியான பணிகள் நடைபெறுகிறது" என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் 330 நாள்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வருகிறார்.