Published:Updated:

மானாமதுரையில் ஆடு திருடும் கும்பல் வாகனச் சோதனையில் பிடிபட்டது!

மானாமதுரையில் ஆடு திருடும் கும்பல் வாகனச் சோதனையில் பிடிபட்டது!
மானாமதுரையில் ஆடு திருடும் கும்பல் வாகனச் சோதனையில் பிடிபட்டது!

மானாமதுரை பகுதியில் சொகுசு காரில் வந்து ஆடு திருடும் கும்பல் வாகன சோதனையின்போது பிடிபட்டது.

மானாமதுரையில் ஆடு திருடும் கும்பல் வாகனச் சோதனையில் பிடிபட்டது!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக நள்ளிரவில் சொகுசு கார்களில் வரும் மர்மநபர்கள் ஆடுகளைத் திருடிச் செல்வதாக போலீஸில் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருந்தது. மானாமதுரை வட்டாரத்தில் செய்களத்தூர், மாங்குளம், கள்ளர்வலசை, கரிசல்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் உப தொழிலாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை வளர்க்கும் இவர்கள் தேவைக்கேற்ப வாரச்சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்து வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வார்கள். 

பகல் முழுவதும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று இரவு நேரங்களில் வீட்டின் அருகில் உள்ள கொட்டில்களில் அடைத்து வைப்பார்கள். மானாமதுரை அருகே நடுமாங்குடியைச் சேர்ந்தவர் லட்சுமணன் தனக்கு சொந்தமான 25 ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு வீட்டின் அருகில் உள்ள தெழுவத்தில் அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில் கார்களில் வந்த மர்மநபர்கள் 8 ஆடுகளை கடத்திச் சென்றனர். அதன் மதிப்பு 40,000 ஆகும். இதுகுறித்து சிப்காட் போலீஸில் புகார் செய்தார். இதேபோல் செய்களத்தூரைச் சேர்ந்த மெய்யக்காளின் 4,500 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஆடும் மாயமானது. மானாமதுரை வைகை ஆற்றுப் பாலத்தின் அருகே அடைத்து வைத்திருந்த மலைச்சாமி என்பவரின் 10,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆடுகளும் மாயமானது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து  போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.