Published:Updated:

சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?

சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?
பிரீமியம் ஸ்டோரி
News
சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?

தம்பியை வெட்டிச் சாய்த்த அண்ணன்... பட்டியல் சமூகப் பெண் கவலைக்கிடம்!

Published:Updated:

சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?

தம்பியை வெட்டிச் சாய்த்த அண்ணன்... பட்டியல் சமூகப் பெண் கவலைக்கிடம்!

சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?
பிரீமியம் ஸ்டோரி
News
சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?

“தமிழகத்தில் ஆணவக்கொலைகளே நடைபெறுவ தில்லை” என்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், ‘‘கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 185 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன’’ என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். தற்போது மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவப்படுகொலைத் தாக்குதலில் காதலன் கொலையாகிவிட, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் மருத்துவமனையில் கவலைக்கிட மான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தக் கொலையைச் செய்திருப்பது, கொலையான இளைஞ ரின் அண்ணன் என்பதுதான் அதிர்ச்சித் தகவல்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடைப் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (21). சுமை தூக்கும் தொழிலாளி. அதே பகுதி யைச் சேர்ந்தவர் துர்கா (16) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இருவரும் காதலித்துள்ளார்கள். துர்காவின் தாய் துப்புரவு தொழிலாளி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் இவர்களின் காதலுக்கு கனகராஜின் அண்ணன் வினோத்குமார் (25) எதிர்ப்பு தெரிவித்து வந்துள் ளார். ஆனாலும், எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் காதலர்கள் இருவரும் சில நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினர். இதில் ஆத்திர மடைந்த வினோத்குமார், காதலர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துர்கா, கோவை அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். உடுமலை சங்கர் ஆணவப் படுகொலைக்குப் பிறகு, மீண்டும் ஓர் ஆணவப் படுகொலையால் அதிர்ந்துபோய்க் கிடக்கிறது கொங்கு மண்டலம். வினோத்குமார் மேட்டுப் பாளையம் போலீஸில் சரண் அடைந்துவிட்டார்.

சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?

கனகராஜ் மற்றும் துர்கா ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள் சிலரிடம் பேசினோம். “ஓராண்டுக்கு மேலாகவே இருவரும் காதலித்து வந்தனர். காதல் விவகாரம் தொடர்பாகச் சகோதரர்கள் இடையே அடிக்கடி சண்டை வரும். கனகராஜுக்கு, தன் தந்தை கருப்பசாமிமீது பாசம் அதிகம். அதனால், கடந்த வாரம் கனக ராஜ், கருப்பசாமியிடம் துர்காவை அழைத்துச் சென்று பேசியுள்ளார். அப்போது, கருப்பசாமி ‘இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதாக’ உறுதியளித்துள்ளார். தொடர்ந்து, இருவரையும் தனி இடத்தில் தங்கவைத்திருக்கிறார். இதை அறிந்த வினோத்குமார் மது குடித்துவிட்டு அந்த இடத்துக்குச் சென்று, கனகராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். குறுக்கே வந்த துர்காவையும் கடுமையாகத் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்துவிட்டார். இப்படி எல்லாம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று அதிர்ச்சி பொங்க விவரித்தனர்.

சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?

துர்காவின் தாய் அமுதா, “சாதியைக் காட்டி அவர்கள் ‘வேண்டாம்’ என்று சொன்னபோதே எங்கள் பெண்ணை எச்சரித்து, பிரித்துவைத்து விட்டோம். சில மாதங்களுக்கு முன்பு வினோத், சாதியின் பெயரைச் சொல்லி, ‘உன் மவளுக்கு என் தம்பி கேட்குதா... உங்களைக் குடும்பத்தோட வெட்டி ஆத்துல வீசிடுவேன்’ என்று வீட்டுக்கே வந்து மிரட்டினார். இதனால், துர்காவைப் பாட்டி வீட்டில் தங்கவைத்திருந்தோம். நான்கு நாள்களுக்கு முன்பு துர்கா காணாமல் போய்விட்டார். நாங்களும் பல இடங்களில் தேடினோம். அதற்குள், எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. என் மகள் பிழைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலைக்குக் காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார் கண்ணீருடன்.

“தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 185 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. இவற்றில், உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கு உட்பட மூன்றே வழக்குகளில் மட்டுமே பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. ஆணவப்படுகொலை தொடர்பாக, உச்ச நீதி மன்றம் மாநிலம் வாரியாகப் புள்ளி விவரங்களைக் கேட்டது. 22 மாநிலங்கள் வழங்கிவிட்டன. ஆனால், தமிழக அரசு வழங்கவே இல்லை. தமிழகம் முழுவதுமே ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் இது மிகவும் அதிகம். எனவே, கொங்கு மண்டலத்தை, ஆணவத் தாக்குதல்கள் நடக்கும் மண்டலமாக அறிவித்து, இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்குச் சிறப்பு போலீஸ் பிரிவை உருவாக்க வேண்டும். இந்த வழக்குகளைக் கையாள சிறப்பு அரசு வழக்கறிஞர் குழுவை அமைக்க வேண்டும். இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். துர்காவின் குடும்பத்துக்கு ஐம்பது லட்சம் ரூபாய் நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்கிறார் சமூக செயற்பாட்டாளர் ‘எவிடென்ஸ்’ கதிர்.

சாதி வெறியை வளர்க்கும் சக்திகள் எவை?

இதுகுறித்துக் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேசுகையில், “இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இந்த வழக்கில் குற்றவாளி கள்மீது கடும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

மேற்கண்ட சம்பவத்தில் கடந்த தலைமுறை யைச் சேர்ந்த காதலனின் தந்தையே சாதியை மறுத்து, காதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், வளர்ந்துவிட்ட சமூகமாகக் கருதப்படும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர், தன் உடன் பிறந்த தம்பியையே சாதி வெறிகொண்டு கொலை செய்திருக்கிறார். அப்படி எனில் சாதி வெறியை ஊட்டி வளர்க்கும் சக்திகள் எவை?

- இரா.குருபிரசாத்
படங்கள்: தி.விஜய்