Published:Updated:

காதல் போர்வையில் பெண்களை ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டிய இளைஞர் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் நாகை சம்பவம்

காதல் போர்வையில் பெண்களை ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டிய இளைஞர் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் நாகை சம்பவம்
காதல் போர்வையில் பெண்களை ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டிய இளைஞர் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் நாகை சம்பவம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்தி பற்றி எரிந்துகொண்டிருக்கும் வேளையில், நாகையில் கல்லூரி மாணவிகள் பலரை காதலிப்பதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சுந்தர் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வண்டிபேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் சுந்தர். வயது 23. இவன் சென்னையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நாகை, திருவாரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரியில் படிக்கும் பல பெண்களை, சுந்தர் தனது காதல் வலையில் சிக்கவைத்து, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனிடையே நாகையைச் சேர்ந்த பெண் ஒருவரையும் (ஜவுளிக் கடையில் வேலை பார்ப்பவர்) இதேபோல் திருமணம் செய்வதாகக் கூறி, காரைக்கால் அங்காளம்மன் கோயிலுக்கு அழைத்து வந்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நெருக்கமான படங்களை எடுத்துள்ளார். 

அந்தப் படங்களை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி சுந்தர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, நேற்று இரவு சென்னை சென்ற தனிப்படை போலீஸார் சுந்தரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் சுந்தரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான பெண்களுடன் சுந்தர் நெருக்கமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பெண்களை ஏமாற்றுதல் பாலியல் துன்புறுத்தலில் அத்துமீறி ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சுந்தரின் செல்போனில் இன்னும் வேறு ஏதாவது பெண்களின் புகைப்படங்கள் உள்ளனவா என போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே  சுந்தர் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

படங்கள் : பா. பிரசன்னா