Published:Updated:

எதுக்கு இப்படி நடந்து கொண்டது போலீஸ்!

கோபத்தில் எகிறும் தமிழ் இன உணர்வாளர்கள்

எதுக்கு இப்படி நடந்து கொண்டது போலீஸ்!

கோபத்தில் எகிறும் தமிழ் இன உணர்வாளர்கள்

Published:Updated:
##~##

நீறு பூத்த நெருப்பாக இருக்கும் முல்லைப் பெரியாறு விவகாரம், சபரிமலையில் மீண்டும் வெடித்து விட்டது. சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தவேலு, சபரிமலைக்கு முதன்முறையாக மாலை அணிந்து, கடந்த 6-ம் தேதி புறப்பட்டார். மறுநாள் பம்பை பகுதிக்குச் சென்றவர், ஒரு டீக்கடையில் தண்ணீர் கேட்டு இருக்கிறார். உடனே கடைக்காரர், ''நடை சாத்தட்டும். 19-ம் தேதிக்குப் பிறகு உனக்கு மட்டும் இல்ல, பாண்டிக்கே (தமிழகம்) தர்றோம் தண்ணீ'' என்று மலையாளத்தில் சொன்னாராம். 

''குடிக்கக் கொஞ்சம் தண்ணி கேட்டேன், அதுக்கு ஏம்ப்பா தேவை இல்லாமப் பேசுற?'' என்று சாந்தவேலு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதுக்கு இப்படி நடந்து கொண்டது போலீஸ்!

கடுப்பானதும், கோபத்தில் அடுப்பில் கொதித்துக்கொண்டு இருந்த வெந்நீரை சாந்தவேலு மீது வீசி இருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத சாந்தவேலு, தப்பிக்க நினைப்பதற்குள்... அவரது உடல் முழுவதும் வெந்நீர் பட்டு வெந்துபோய் விட்டது.

இந்தத் தகவல் எதுவும் தெரியாத சாந்தவேலுவின் மனைவி சித்ராவின் செல்​போனுக்கு அன்று இரவு, 'சாந்தவேலுவுக்கு உடல்நிலை சரியில்லை. கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்’ என்று கேரள போலீஸ் தகவல் தெரிவித்து உள்ளது. பதறித் துடித்த உறவினர்கள் கோட்டயத்துக்குப் புறப்பட்டனர்.  

அதற்குப் பிறகு நடந்ததை சாந்தவேலுவின் சகோதரர் பலராமன் சொல்கிறார். ''திங்கள் கிழமை காலையில கோட்டயம் ஆஸ்பத்திரிக்குப் போனோம். ஒரு மணி நேரம் தேடிய பிறகு, அந்த ஆஸ்பத்திரியின் ஒரு மூலையில் சாந்தவேலு கிடந்ததைக் கண்டுபிடித்தோம். நிர்வாண நிலையில் மலம், சிறுநீர் கழித்து அதிலேயே படுத்துக்கிடந்தார். வலது கை, கால்களைத் தவிர உடல் முழுவதும் வெந்து கூழ் மாதிரி இருந்தது. கஷ்டப்பட்டு

எதுக்கு இப்படி நடந்து கொண்டது போலீஸ்!

சென்னைக்குக் கொண்டுவந்து கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்தி​ரியில் சேர்த்தோம். பொங்கல் அன்றைக்கு இறந்து போயிட்டார்'' என்று கதறினார்.

சாந்தவேலு உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் வந்து குவிந்தார்கள். 'அரசு நிவாரணம் அறிவிக்கும் வரை உடலை அடக்கம் செய்வது இல்லை’ என்று தமிழ் உணர்வாளர்கள் போராடினர்.  கடந்த 18-ம் தேதி, திடுமென இன்னொரு முகத்தைக் காட்டியது போலீஸ். தமிழ் இன உணர்​வாளர்களை ஒட்டுமொத்தமாகக் கைது செய்தனர். சாந்தவேலு உடல் அருகே கதறியபடி நின்ற  அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளையும் முடியைப் பிடித்து இழுத்துத் தள்ளி அப்புறப்படுத்தினார் ஒரு இன்ஸ்பெக்டர். சாந்தவேலு உடல் இருந்த கண்ணாடிப் பெட்டியை, அம்பத்தூர் மின் தகன நிலையத்துக்கு எடுத்துச் சென்று போலீஸே உடலைத் தகனம் செய்தது. கைது செய்யப்பட்ட உணர்வாளர்கள் அனைவரும் ஒரு கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு, 'நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமானும் வந்து கலந்து கொண்டார்.

இதுபற்றிப் பேசும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், ''தமிழக போலீஸார் வெறியாட்டம் ஆடி விட்டனர். சாந்தவேலு குடும்பத்துக்கு கேரள அரசு ஒரு கோடி நிதி வழங்க வேண்டும். தமிழக அரசு 10 லட்சம் ரூபாயும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை களை வைத்தோம். அடுத்த கட்டமாக நீதிமன்றத்துக்கு செல்வோம்..'' என்றார் ஆவேசத்துடன்.

ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ''விலங்குகளை அடித்து விரட்டுவது போல

எதுக்கு இப்படி நடந்து கொண்டது போலீஸ்!

எங்களை போலீஸார் விரட்டினார்கள். சாந்த​வேலுவின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது குடும்பத்தினரைக்கூட அழைத்துச் செல்லவில்லை. சாந்தவேலுவின் சாம்பலைக்கூட இன்னும் குடும்பத்தினரிடம் கொடுக்கவில்லை. இங்கே இருப்பது மெட்ராஸ் போலீஸா அல்லது மலபார் போலீஸா என்று தெரியவில்லை'' என்றார் கோபம் தணியாமல்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் வன்னி அரசு, ''சாந்தவேலுவின் மனைவி சித்ராவையும் பெண் குழந்தைகளையும் அன்று காலையில் இருந்தே போலீஸ் அதிகாரி ஐயப்பன் மிரட்டிக்கொண்டே இருந்தார். அவர் சித்ராவைத் திட்டிய வார்த்தைகளை அச்சில் ஏற்ற முடியாது. இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, உம்மன் சாண்டி ஆட்சியா என்று தெரியவில்லை'' என்றார் வேதனையுடன்.

''அரசு ஏன் இப்படி நடந்துகொண்டது?'' என்று பொன்னேரி கோட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் பேசினோம். ''சாந்தவேலு உடல் நீண்ட நேரத்துக்குத் தாங்காது என்று மருத்துவர்கள் கூறினர்.  அதனால்தான் போலீஸ் துணையுடன் அப்புறப்படுத்தினோம். போலீஸ் அநாகரீகமாக நடந்துகொண்டது குறித்து என்னிடம் மனு கொடுத்தால், கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன். சாந்தவேலுவின் சாம்பல், அம்பத்தூர் தகன மையத்தில் இருக்கிறது. விதிமுறைப்படி மூன்று நாட்களுக்குள் அந்தக் குடும்பத்தினர் சென்று அதை வாங்கிக்கொள்ளலாம். நிவாரணம் வேண்டும் என்றாலும் மனு கொடுத்தால் முறைப்படி பெற்றுத்தர முயற்சி எடுப்பேன்'' என்றார்.

சாமி கும்பிடப் போன தமிழனுக்கு... தலைவனை இழந்த குடும்பத்துக்கு பதில் சொல்வது யார்?

- எஸ்.கோபாலகிருஷ்ணன்

படங்கள்: எம்.உசேன்