Published:Updated:

தமிழ் அறிஞர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!

தமிழ் அறிஞர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!

தமிழ் அறிஞர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!

தமிழ் அறிஞர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!

Published:Updated:
##~##

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஒன்பது தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா, கடந்த 16-ம் தேதி எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடந்தது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த விருது வழங்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி தவறாமல் கலந்துகொண்டு தமிழின் பெருமை பேசுவார். அதுபோல், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு விருதுகளை வழங்குவார் என்று எதிர்பார்த்த தமிழ் அறிஞர்களுக்கு ஏமாற்றம்! 

விழாவில், தலைமை உரை ஆற்றிய அமைச்சர் ஓ.பன்னீர்​செல்வம், ''தஞ்சையில் எட்டா​வது உலகத்தமிழ் மாநாடு நடத்திய முதல்வர், அறிவியல் தமி​ழைக் கொண்டுவந்தார். தமிழை உலக மொழியாகக் கொண்டுசெல்லும் விதத்தில், டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ 50 லட்சம் ரூபாய் நிதி அளித்தார். இப்போது தமிழறிஞர்கள் ஒன்பது பேருக்குச் சிறப்பு விருதுகள் வழங்கியதோடு, வயது முதிர்ந்த தமிழறிஞர்களின் உதவித்தொகையை ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரமாக உயர்த்தி உள்ளார்'' என்று அம்மா புராணம் பாடினாரே தவிர, ஏன் முதல்வர் வரவில்லை என்று எந்தக் காரணமும் சொல்லவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் அறிஞர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!

நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு தந்தை பெரியார் விருது,

தமிழ் அறிஞர்களை ஏமாற்றிய ஜெயலலிதா!

நாவலர் நெடுஞ்செழியனின் தம்பி இரா.செழியனுக்குப் பேரறிஞர் அண்ணா விருது என்று ஒரே குடும்பத்துக்கு இரண்டு விருதுகள் கொடுக்கப்பட்டது ஆச்சர்யம்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பேச்சாளருமான இரா.செழியன் விருது பெற்ற ஒன்பது பேர் சார்பாக ஏற்புரை வழங்கினார். ''தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு விடிவு காலம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தை வளர்க்காமல் மக்களின் பேராதரவுடன் நேரடியாக ஆட்சி செய்யும் முதல்வர் ஜெயலலிதாவால் இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படப்போகிறது. உலக வரலாற்றிலேயே அதிகமான பெண் புலவர்கள் இருந்தது தமிழகத்தில்தான். சங்க காலத்தில் இருந்து இதற்குச் சான்றுகள் கூறலாம். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண் அறிஞர்கள் பெயரிலும் விருதுகள் அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

''இந்த விழா வெறுமனே கடமைக்காக நடத்தப்பட்டதைப்போல இருக்கிறது. முதல்வருக்குக் கைகூப்பி மரியாதை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.  அவர் தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளைக் கோரிக்கையாகக் கொண்டு வந்தோம். முதல்வர் வராததால் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இனி எப்போது அவரைப் பார்க்கவும் பேசவும் முடியும்'' என்று, விருது வாங்கியவர்கள் மேடைக்குக் கீழே வருத்தம் தோய்ந்த குரலில் பேசிக்கொண்டார்கள்.

பாவம்!

- க.நாகப்பன்  

படங்கள். கே.கார்த்திகேயன்