Published:Updated:

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது

மும்பை:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பன், மும்பையில் நேற்றிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து, அவரது வீட்டுக்கு நேரடியாக வந்து மும்பை போலீசார் சம்மன் வழங்கினர்.

இதையடுத்து, தனக்கு ஆஜராக கால அவகாசம் தேவை என குருநாத் விடுத்த கோரிக்கையையும் மும்பை போலீசார் நிராகரித்தனர்.

இந்நிலையில், கொடைக்கானலில் தங்கியிருந்த, குருநாத் மெய்யப்பன் போலீசில் ஆஜராவதற்காக விமானம் மூலம் நேற்று மும்பை புறப்பட்டு சென்றார். மும்பை சென்ற அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் மூன்று மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் குருநாத்தை கைது செய்துள்ளதாக மும்பை போலீஸ் அறிவித்தது. கூட்டுச்சதி, மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருநாத் மெய்யப்பனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.