Election bannerElection banner
Published:Updated:

`நைசாகப் பேசி வலையில் விழவைப்பான்!' - பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட கோவைக் கபடி வீராங்கனை புகார்

`நைசாகப் பேசி வலையில் விழவைப்பான்!' - பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட கோவைக் கபடி வீராங்கனை புகார்
`நைசாகப் பேசி வலையில் விழவைப்பான்!' - பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட கோவைக் கபடி வீராங்கனை புகார்

`நைசாகப் பேசி வலையில் விழவைப்பான்!' - பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட கோவைக் கபடி வீராங்கனை புகார்

`கபடி பயிற்சியாளரின் மகன் என்னிடம் வலுக்கட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்' எனப் போலீஸில் புகார் கொடுத்த கல்லூரி மாணவியை, குற்றம் சாட்டப்பட்டவருடைய குடும்பமே சேர்ந்து தாக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`நைசாகப் பேசி வலையில் விழவைப்பான்!' - பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட கோவைக் கபடி வீராங்கனை புகார்

என்ன நடந்தது?  கோவை கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்த பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் பேசினோம், ``என்னுடைய பெயர் ரேஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆறு வருஷத்துக்கு முன்னாடியே என்னுடைய அப்பா இறந்துட்டார். அம்மாதான் கஷ்டப்பட்டு துணிக் கடைக்கு வேலைக்குப் போய் என்னையும் என் தங்கச்சியையும் படிக்க வைக்கிறாங்க. ஸ்கூல் படிக்கும்போதே, நான் மூன்று முறை ஸ்டேட் பிளேயராக தமிழகத்துக்காக விளையாடியிருக்கேன். கபடின்னா எனக்கு உயிர்.

ஸ்கூல் முடிச்சுட்டு கோவை காலேஜ்ல சேர்ந்தேன். காலேஜிலும் விளையாட்டை விடக்கூடாதுன்னு ஆர்வமா கபடி போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சேன். அப்போதான் எங்களுடைய கபடி கோச் விஸ்வநாதனின் கேவலமான முகம் தெரிஞ்சது. அவர்கிட்ட கோச்சிங்கிற்குப் போகிற பொண்ணுங்ககிட்ட ஆபாசமா நடந்துக்குவாரு. கொஞ்சம் கொஞ்சமா அத்துமீறலில் ஈடுபட்டு, என் வீட்டில் யாரும் இல்லாதபோது, வந்து என்னை குளிப்பாட்டி விடுறியா என்றெல்லாம் கேட்பார்.

இதற்கு ஒத்துவராத மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க மாட்டார். அதுமட்டுமல்ல, கல்லூரி நிர்வாகத்திடம் ஏதாவது காரணம் சொல்லி அந்த மாணவிகளைத் தேர்வு எழுத விடாமல் செய்துவிடுவார் விஸ்வநாதன். இவர் மட்டுமல்ல, இவரின் மகன் சஞ்சீவ்குமாரும் சாதாரண ஆள் இல்லை. தன்னுடைய அப்பாவிடம் கோச்சிங்கிற்கு வரும் பெண்களிடம் 'நைசாகப் பேசி ' தன் வலையில் விழ வைக்க முயற்சி செய்வான். அப்படித்தான் என்னிடமும் எல்லை மீறிப் பேசினான். எனக்கு அவன் என்ன நோக்கத்தோடு பேசுகிறான் என்று தெரிந்ததும் நான் அவன் பக்கமே திரும்பவில்லை. என்ன நினைத்தானோ தெரியவில்லை ஒருநாள் திடீரென்று, நீ வெர்ஜின்தானா என்று டெஸ்ட் செய்ய வேண்டும்' வீட்டுக்கு வரும்போது காண்டம் வாங்கி வா' என்று சொன்னான். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கடுமையாகத் திட்டிவிட்டுட்டேன். இனி வம்பு செய்ய மாட்டான் என்று நினைத்தேன். ஆனால், நான் பயிற்சிக்குச் சென்றிருந்தபோது வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்தான். 

உடனே இந்த விஷயத்தை என் அம்மாவிடம் சொல்லி சஞ்சீவ்குமார் மீது போத்தனூர் போலீஸில் புகார் கொடுத்தேன். போலீஸாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து, சஞ்சீவ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்ததற்காக ஆத்திரம் அடைந்து, சஞ்சீவ்குமாரின் அம்மா சுசீலா, மனைவி மீனா, தங்கை ரம்யா ஆகியோர் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னை சரமாரியாக அடித்துவிட்டனர். அதோடு எனக்கும் எனக்கு ஆதரவாக இருந்த ஒரு மாணவியையும், மாணவரையும் விஸ்வநாதன் தேர்வு எழுத முடியாமல் செய்துவிட்டார். அதனால் விஸ்வநாதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறது போலீஸ்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு