Published:Updated:

தேர்வு எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய மாணவி! - வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் கதறல்

லோகேஸ்வரன்.கோ
தேர்வு எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய மாணவி! - வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் கதறல்
தேர்வு எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய மாணவி! - வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் கதறல்

பேரணாம்பட்டில், 9-ம் வகுப்பு மாணவி தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இறப்புக்கான காரணம்குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு டவுன் சாலப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் மகள் சுடர்மதி (14), அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். தற்போது, பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது. 9-ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்ற மாணவி, மாலையில் வழக்கம்போல் வீடு திரும்பினார். அந்த நேரத்தில் வீட்டில் யாருமில்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தார். 

பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகள் சுடர்மதி தூக்கில் சடலமாகத் தொங்கிய நிலையில் இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தூக்கிலிருந்து உடலைக் கீழே இறக்கி, கட்டித்தழுவி கதறி அழுதனர். இதுபற்றி தகவலறிந்ததும், பேரணாம்பட்டு     சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவுசெய்த போலீஸார், மாணவி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.