Published:Updated:

`இன்னைக்கு அவனுக்கு எக்ஸாம்; ஆனால் அவன் இல்லை!'- மின்வாரியம் அலட்சியத்தால் கண்ணீர்விடும் மாணவனின் உறவினர்கள்

நீலகிாி மாவட்டம், குன்னூரில் வீட்டு மாடியில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிாிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிாி மாவட்டம், குன்னுாா் அருகே உள்ள ஒதனட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிகுமாா்- வைதேகி தம்பதிக்கு பிரவீன் (14), நவீன் (8) இரண்டு மகன்கள் உள்ளனர். பிரவீன் அருவங்காடு பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறான். பிரவீனுக்கு தேர்வு சமயம் என்பதால்  ஸ்டடி லீவ்  விடப்பட்டுள்ளது. நேற்று வீட்டின் மேற்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். வீட்டின் அருகே கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. வீட்டின் மேல்புறம் மின்கம்பி எட்டிப்பிடிக்கும் உயரத்தில் தாழ்வாக இருந்தது. இதை அறியாத சிறுவன் பிரவீன்

`இன்னைக்கு அவனுக்கு எக்ஸாம்; ஆனால் அவன் இல்லை!'- மின்வாரியம் அலட்சியத்தால் கண்ணீர்விடும் மாணவனின் உறவினர்கள்

விளையாடிக்கொண்டிருக்கையில் அவனது சட்டை அருகில் இருந்த கம்பியில் சிக்கியுள்ளது. இதை எடுக்க முயற்சிக்கையில்  மாணவனின்  கழுத்து தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசியது. இதில் தூக்கிவீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தான். ஆனால் வீட்டின் அருகே யாரும் இல்லாததால் சுமாா் ஒரு மணிநேரம் பிரவீன் மின்கம்பியில் தொங்கியபடி இருந்துள்ளான். அப்போது அவ்வழியாக வந்த கிராம மக்கள் உடனடியாக மின்வாாியத்திற்கும் பாேலீஸாருக்கும் தகவல் அளித்துள்ளனா். விரைந்து வந்து மின்வாாிய ஊழியா்களும் போலீஸாரும் மின் இணைப்பைத் துண்டித்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பாிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து பிரவீனின் உறவினர்கள் கூறுகையில், `இந்தப் பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவே உள்ளது. பலமுறை மின் வாரிய ஊழியர்களிடம் தெரிவித்தும் பயனில்லை. வீட்டின் மேல்புறம் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் பரிதாபமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். இன்றைக்கு அவனுக்கு எக்ஸாம் உள்ளது. ஆனால் அவன் இல்லை'' எனக் கண்ணீர் வடிக்கின்றனர். 

அடுத்த கட்டுரைக்கு